இன்றைய நாள் – 01.03.2020

மேஷம் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திட்டமிடாத செலவுகளும் பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்கள் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

 கணவன்-மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவது நல்லது. சகோதர வகையில் சங்கடங்கள் வரும். பழைய பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். நிதானம் தேவைப்படும் நாள்.

 

 எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களின் புது திட்டங்களை அதிகாரிகள் வரவேற்பார்கள். சிறப்பான நாள்.

 

 புதிதாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். மதிப்புக் கூடும் நாள்.

 

கோபத்தைக் கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வீடு வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். தெளிவான முடிவுகள் எடுக்கும் நாள்.

 

 சந்திராஷ்டமம் தொடர்வதால் உணர்ச்சி வசப்பட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். உங்களின் அணுகுமுறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர கூடிய சூழல் உருவாகும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

 

 கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்துபோகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். பழைய பிரச்சினைகளை பேசித்தீர்ப்பீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.

 

 கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் பற்றுவரவு உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயமடைவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

 

 புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர் கல்வி, உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். அக்கம் பக்கம் இருப்பவர்கள் உதவிக்கரமாக இருப்பார்கள். நட்பு வழியில் நல்லசெய்தி கேட்பீர்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலியவந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

 

 எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பழைய கடனை தீர்க்க புது வழி பிறக்கும். கலை பொருட்கள் வாங்குவீர்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி கிட்டும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

 

 குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். உங்களைத் தவறாக நினைத்துக் கொண்டிருந்தவர்களின் மனம் மாறும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். புகழ்கூடும் நாள்.

 

 சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய முயற்சிகள் நிறைவேறும் நாள்.