Story Details

subhatamilkathaigal-Tamil-stories-Tamil-poems: முயற்சி

Posted By sudhakar on POEM

http://subhastories.blogspot.com - முயற்சி
ஒன்று நினைத்து, உருட்டப் பகடையை
எண்ணிய படியே என்றும் விழாத
தாயமாய், வாழ்விலும் சற்றும் எண்ணா
மாயங் கள்பல வந்த வண்ணம்
உள்ளதே ; உள்ள உளைச்சல் இல்லா
உள்ளம் பெறவே, ஒருவழி உள்ளது.
எதுவோ நடக்குது, எதற்கா கவோதான்
அதுநடக் குதுமனம் அப்போது நினைத்திடப்
பழக்கம் செய்க; பலதடை வரட்டுமே
விழவிடா துமனதை விடாது முயல்கவே

Submit a Comment

Log in to comment or register here