நிபந்தனைகளின் அடிப்படையில் தலைவா படத்தை 23ம் திகதி வெளியிட முடிவு!
விஜய்யின் தலைவா படத்தை சில நிபந்தனைகளின் அடிப்படையில் வரும் 23ம் திகதி வெளியிட திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.பல்வேறு பிரச்சினைகள் காரணமாக தலைவா படத்தை வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் படம் இன்று வருமா நாளை வருமா என தவிப்போடு இருப்பதாக விஜய் வீடியோவில் உருக்கம் காட்டினார். திரையுலக பிரமுகர்கள் சிலரும் படத்தை வெளியிடும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.இப்படம் வெளியாக முதல்வர் உதவ வேண்டும் என திரும்பத் திரும்ப விஜய்யும் அவரைச் சார்ந்தவர்களும் கூறிவருவது அரசுத் தரப்பிற்கு கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
படத்தை வெளியிடுவதும் வெளியிடாததும் திரையரங்குகள் விருப்பம். அரசையோ முதல்வரையோ இதில் தொடர்பு படுத்தக் கூடாது என தலைவா படம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அரசுத் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.
எனவே இனி படத்தை வெளியிடுவது திரையரங்கு உரிமையாளர்களின் கையில்தான் உள்ளது. இந்நிலையில் நேற்று கூடிய திரையரங்கு உரிமையாளர்கள், தலைவா படத்தை வரும் 23ம் திகதி வெளியிடலாமா என ஆலோசித்துள்ளனர்.
ஆனால் அன்று தேசிங்கு ராஜா படத்திற்கு 350 அரங்குகள் கொடுத்திருப்பதால், விஜய் தரப்பு கேட்கும் 500 அரங்குகளில் வெளியிடுவது சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளனர்.
250 முத்ல 300 அரங்குகளில், சதவீத அடிப்படையில் வேண்டுமானால் வெளியிடலாம் என்றும் ஒருமனதாக முடிவு செய்துள்ளனர்.
இந்த நிபந்தனைக்கு விஜய் தரப்பு ஒப்புக் கொண்டால், தலைவா படம் அடுத்த வாரம் வெளியாகும் என்று தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-----------------------------------------------
Tamilus இன் பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களுடை நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !
If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !
கருத்துகள் இல்லை