நடிகர் மணிவண்ணன் மனைவி செங்கமலம் இன்று திடீர் மரணம்
கணவர் இறந்த இரண்டு மாதத்தில் நடிகர் மணிவண்ணன் மனைவி செங்கமலம் இன்று திடீரென மரணம் அடைந்தார்.
பிரபல நடிகரும், இயக்குனருமான மணிவண்ணன் கடந்த ஜூன் 15ஆம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். இதையடுத்து, அவரது மனைவி செங்கமலம் (55) மகன் ரகுவண்ணனுடன் சென்னை கே.கே.நகர் ஜெய்பாலாஜி நகர் திருமலை தெருவில் வசித்து வந்தார்.
கணவர் இறந்த பின்னர் சோகத்தில் இருந்த செங்கமலத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செங்கமலம், கணவன் இறந்த 2 மாதத்தில் இன்று அதிகாலை மரணம் அடைந்தார்.
கே.கே.நகரில் உள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள உடலுக்கு திரையுலக பிரமுகர்களும் அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். இறுதிச் சடங்கு இன்று மாலை நடக்கவிருக்கின்றது என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

-----------------------------------------------
Tamilus இன் பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களுடை நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !
If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !
கருத்துகள் இல்லை