Sunday, December 29.

இலங்கை கிரிக்கெட் வீரருக்கு தொடர்பு

Sri_Lanka_Cricket


பங்களாதேஸில் நடைபெற்ற பங்களாதேஸ் பிரீமியர் லீக் தொடரில், இடம்பெற்ற ஆர்ட்ட நிர்ணய சதி குறித்த தகவலை மறைத்ததாக இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் ஒருவர் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

இந்த தொடரின் போட்டி ஒன்றில் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபடுமாறு இலங்கை வீரர் ஒருவர் அணுகப்பட்ட போதும், அதனை அவர் நிராகரித்துள்ளார்.
எனினும் இது குறித்த அவர் சர்வதேச கிரிக்கட் பேரவைக்கு தகவல் வழங்கி இருக்கவில்லை.

இந்த நிலையில் குறித்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள வீரர் நேற்றையதினம் சிறிலங்கா கிரிக்கட் நிறைவேற்று குழுவின் முன்னால் அழைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது .
குற்றம் சுத்தப்பட்டுள்ள வீரர் முன்னர் இலங்கை கிரிக்கட் அணியில் விளையாடி இருந்த போதும், பின்னர் சரியாக திறமையை வெளிப்படுத்தாக காரணத்தினால் அணியில் இருந்து நீக்கப்பட்டவர் என்றுகூறப்படுகிறது.

பங்களாதேஸ் பிரீமியர் லீக் தொடரின், டாகா கிளேடியேட்டர் அணியில் பங்கு பற்றி இருந்த 9 வீரர்கள் ஆட்டநிர்ணய சதி தொடர்பான குற்றச்சாட்டுடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது அவர்களுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

கருத்துகள் இல்லை

Post Top Ad

Post Bottom Ad