• Breaking News

    பூஸ்டர் தடுப்பூசி ஏற்றல் வடக்கில் நாளை ஆரம்பம்



    கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் எனப்படும் மூன்றாவது டோஸ் செலுத்தும் நடவடிக்கை  நாளை புதன்கிழமை தொடக்கம் முன்னெடுக்கப்படும் என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். 

    சுகாதாரத் தரப்பினர், படைத்தரப்பினர் உள்ளிட்ட முன்கள செயல்பாட்டாளர்களுக்கு முதல் கட்டமாக தடுப்பூசி செலுத்தப்படும். இதன் தொடர்ச்சியாக நோயாளர்கள் மற்றும் வயோதிபர்களுக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித் துள்ளார். 

    பூஸ்டர் டோஸாக பைசர் தடுப்பூசி செலுத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப் பட்டமை குறிப்பிடத்தக்கது. 


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad