பிரபல கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோ தமிழில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கிறார்.
சேரனின் முரண் படத்தை இயக்கியவர் ராஜன் மாதவ்.
இவர் தற்போது இயக்கும் உலா என்ற படத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர் பிராவோ நடிக்கிறார்.
தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் பிராவோ, ரசிகர்கள் மனதுக்குள் இடம்பிடித்த வீரர்.
மைதானத்தில் அவரது உடல் மொழியைக் கவனித்த இயக்குநர், தனது அடுத்த படத்தில் அவருக்கு சிறப்புத் தோற்றம் கொடுத்திருக்கிறார்.
விரைவில் தனது முதல் தமிழ்ப் படம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளிக்கப் போகிறார் பிராவோ.
இந்த படத்தை ட்ரீம் பிரிட்ஜ் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது.
-----------------------------------------------
Tamilus இன் பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களுடை நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !
If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
கருத்துகள் இல்லை