சிரஞ்சீவியின் 150வது படம் , இயக்குநயர் ஷங்கர் இணைகிறார் ?
சில வருடங்களாக தனது 150வது படம் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறார் சிரஞ்சீவி. திரையில் அவரது காலம் முடிந்து அவரது மகன் வயது நாயகர்களின் புதிய காலம் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அவர்களை தூக்கி சாப்பிடுவது போல் இருக்க வேண்டும் தனது 150வது படம் என்று ஆந்திர சூப்பர்ஸ்டார் நினைப்பதில் எந்த தவறுமில்லை. கடைசியாக தனது மகன் ராம் சரண் தேஜாவின் மஹாதீரா படத்தில் கௌரவ வேடத்தில் தோன்றினார் சிரஞ்சீவி. அதன் பிறகு அரசியல் அவரை ஆட்கொண்டுவிட்டது. இந்நிலையில் ஆந்திராவில் சிரஞ்சீவியின் 150வது படம் குறித்து மீண்டும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். புயல் வருவது மாதிரி அவ்வப்போது இது நிகழக் கூடியதுதான் என்றாலும் இந்தமுறை படத்தை இயக்கப் போவது நம்மூர் ஷங்கர் என்ற சேதியையும் சேர்த்து கிசுகிசுக்கிறார்கள்.இந்தச் செய்தியை இதுவரை சிரஞ்சீவியோ, ஷங்கரோ உறுதி செய்யவில்லை. என்றாலும் சிரஞ்சீவி - 150வது படம் - ஷங்கர் - அட, கூட்டு கலக்கலா இருக்கே என்று ஆந்திராவாலாக்கள் குதூகலிக்கிறார்கள்.
கருத்துகள் இல்லை