நேபாளம் தகுதி - இருபது பந்துப்பரிமாற்ற உலக கோப்பை 2014
வங்காளதேசத்தில் அடுத்த ஆண்டு இருபது பந்துப்பரிமாற்ற உலக கோப்பை மட்டைப்பந்துப் போட்டி நடைபெறவுள்ளது. இதற்கான தகுதிகாண் சுற்று போட்டிகள் அபுதாபியில் நடந்து வருகிறது. நேற்று காலிறுதி ஆட்டம் ஒன்றில் நேபாளம்–ஹாங்காங் அணிகள் மோதின. இதில் ஹாங்காங் நிர்ணயித்த 144 ஓட்ட இலக்கை நோக்கி ஆடிய நேபாள அணிக்கு கடைசி பந்துப்பரிமாற்றத்தில் 13 ஓட்டங்க தேவைப்பட்டது. வேசாவ்கர் அடித்த எல்லை தாண்டிய ஆறு, நான்கு ஓட்ட உதவியுடன் கடைசி பந்தில் நேபாள அணி சுவாரசிய வெற்றியை பெற்றது. இதன் மூலம் அரையிறுதிக்கு முன்னேறியது மட்டுமின்றி 20 பந்துபரிமாற்ற உலக கோப்பை போட்டிக்கும் நேபாளம் அணி தகுதி பெற்றது. மிகப்பெரிய போட்டிகளில் நேபாள அணி விளையாட இருப்பது இதுவே முதல் முறையாகும். ஏற்கனவே ஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகளும் இருபது பந்துப்பரிமாற்ற உலக கோப்பைக்கான தகுதியை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை