• Breaking News

    3–வது ஒருநாள் போட்டி: தவான் சதம்- வெற்றியை நோக்கி இந்தியா

    கடைசி ஒருநாள் போட்டியில் 264 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய இந்திய அணியின் ஷிகர் தவான் சதமடித்தார். 35 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 207 ரன்களுடன் வெற்றியை நோக்கி இந்திய அணி பயணித்துக் கொண்டிருக்கிறது.

    மேற்கிந்திய தீவுகள்- இந்திய அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டித் தொடரில் கொச்சியில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்திலும், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 2 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் 1-1 என்ற கணக்கில் சமநிலை ஏற்பட்டது.

     
    3–வது ஒருநாள் போட்டி: தவான் சதம்- வெற்றியை நோக்கி இந்தியா

     

    இந்த இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இன்று காலை தொடங்கியது. தொடக்கம் முதலே மேற்கிந்திய தீவுகள் அணி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது.

    அந்த அணியின் பொவெல், சாமுவேல்ஸ், பிராவோ ஆகியோர் கணிசமான ரன்களைக் குவித்தனர். பொவெல், சாமுவேல்ஸ் ஆகியோர் 70 மற்றும் 71 ரன்களை குவித்தனர். 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 263 ரன்களை எடுத்தது மேற்கிந்திய தீவுகள் அணி.

    இந்திய அணியின் அஸ்வின் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜடேஜா, புவனேஸ்வர் குமார், ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதனைத் தொடர்ந்து 264 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும் தவானும் களமிறங்கினர்.

    ரோஹித் சர்மா 4 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் தவானுடன் விராத் கோஹ்லி களமிறங்கினார். ஆனால் கோஹ்லியும் 19 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் தவான்- யுவராஜ் சிங் ஜோடி நிலைத்து ஆடி ரன்களைக் குவித்தது.

    தவான், 74 பந்துகளில் சதத்தைக் கடந்தார். யுவராஜ்சிங் 55 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இந்திய 35 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 207 ரன்களை எடுத்து வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad