• Breaking News

    பாகிஸ்தானுக்கு எதிரான கடைசிப்போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி: 4-1 என தொடரை கைப்பற்றியது


    பாகிஸ்தான்– தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 5–வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஷார்ஜாவில் நேற்று பகல்– இரவாக நடந்தது.

    முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 268 ரன் எடுத்தது. கேப்டன் டிவில்லியர்ஸ் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவரது 15–வது செஞ்சூரி இதுவாகும். அவர் 115 ரன்னும், டுபெலிசிஸ் 46 ரன்னும் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் அஜ்மல் 3 விக்கெட்டும், ஜூனைத்கான் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணி தென்ஆப்பிரிக்க வீரர்களின் அபாரமான பந்து வீச்சில் நிலைகுலைந்தது.


    அந்த அணி 35.3 ஓவரில் 151 ரன்னில் சுருண்டது. இதனால் பாகிஸ்தான் அணி 117 ரன்னில் மோசமான தோல்வியை தழுவியது. சோயிப் மசூத் அதிகபட்சமாக 53 ரன் எடுத்தார். பர்னல் 3 விக்கெட்டும், பிலாண்டர், மெக்லரன், டுமினி தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    இந்த தொடரில் தென் ஆப்பிரிக்கா 4–வது வெற்றியை பெற்றது. ஏற்கனவே முதல் ஆட்டத்தில் 1 ரன்னிலும், 3–வது போட்டியில் 68 ரன்னிலும், 4–வது போட்டியில் 28 ரன்னிலும் வென்று இருந்தது. பாகிஸ்தான் 2–வது ஆட்டத்தில் 66 ரன்னில் வென்று இருந்தது.

    இதனால் தென்ஆப்பிரிக்கா 4–1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் கொண்ட தொடர் சமநிலையில் முடிந்தது. இரண்டு 20 ஓவர் போட்டித் தொடரில் முதல் ஆட்டம் நாளை (புதன்கிழமை) நடக்கிறது.

     -----------------------------------------------

    Tamilus இன் பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களுடை நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

    If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !


    Get in Touch With Us to Know More

    kindpng_1122282

    Brand-Center_-social-icons_join-us-community-icon_purple

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad