வட்மோரின் பதவிக்காலம் நீடிக்கப்பட மாட்டாது: பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தீர்மானம்
எதிர்வரும் டிசெம்பர், ஜனவரி மாதங்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ள இலங்கை அணியுடனான சுற்றுப்போட்டியே வட்மோரின் பயிற்சியின் கீழ் பாகிஸ்தான் அணி விளையாடும் கடைசி சுற்றுப்போட்டியாக அமையும்.
அதன்பின்னர் பெப்ரவரி இறுதியில் ஆரம்பமாகவுள்ள ஆசிய கிண்ணப் போட்டிகளின்போது பாகிஸ்தான் அணியின் பயிற்றுநராக வேறொருவர் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை அணி 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்றபோது அணி யின் பயிற்றுநராக திகழ்ந்த டேவ் வட்மோர், கடந்த வருடம் மார்ச் மாதம் பாகிஸ்தான் அணியின் பயிற்றுநராக நியமிக்கப்பட்டார்.
ஆனால் அதன்பின்னர் பாகிஸ்தான் அணி பல சுற்றுப்போட்டிகளில் தோல்வியுற்ற மையால் வட்மோரின் செயற்பாடுகள் தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அதிகாரிகள் அதிருப்தி கொண்டுள்ளளனர். பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித்தலைவர்கள், பயிற்றுநர்கள் சிலரும் வட்மோரை நீக்க வேண்டுமென கருத்துத் தெரிவித்திருந்தனர்.
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஐ.சி.சி. சும்பியன்ஸ் கிண்ணத் தொடரில் ஒரு போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெறத் தவறியது.
அதையடுத்து வட்மோரை பதவி நீக்கம் செய்வதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முயற்சித்ததாகவும் ஆனால், அவரை திடீரென பதவி நீக்கம் செய்வதற்கு 3 மாதகால சம்பளம் வழங்கப்பட வேண்டுமென்பதை கருத்திற்கொண்டு அத்திட்டத்தை கைவிட்டதாகவும் கூறப்படுகிறது.
தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் தொடரிலும் பாகிஸ்தான் அணி தோல்வியுற்றுள்ளது. இந்நிலையிலேயே வட்மோரின் பதவிக்காலத்தை நீடிப்பதில்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.
வட்மோரின் பயிற்சியின் கீழ் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இதுவரை டெஸ்ட் தொடர் எதிலும் வெற்றி பெறவில்லை. அவரின் பதவிக்காலத்தில் விளையாடிய 10 டெஸ்ட் போட்டிகளில் 2 போட்டிகளில் மாத்திரமே பாகிஸ்தான் அணி வென்றுள்ளது.
பாகிஸ்தான் அணியின் புதிய பயிற்றுநராக உள்நாட்டைச் சேர்ந்த ஒருவரை நியமிப்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை விரும்புகிறது.
பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் இடைக்கால நிர்வாகக் குழுவின் தலை வர் நஜாம் சேத்தி இது தொடர்பாக கூறுகையில், “இப்பயிற்றுநர் குறிப்பிடத்தக்களவு தனது பணியை செய்துள்ளார்.
ஆனால் அவரின் பதவிக்காலம் பெப்ரவரி மாதம் முடிவடைகிறது. உள்நாட்டுப் பயிற்றுநர் ஒருவரை நியமிக்க வேண்டுமென அதிக அழுத்தம் கொடுக்கப்படுகிறது என்பதை நாம் நிராகரிக்கவில்லை” என்றார்.
“வெளிநாட்டுப் பயிற்றுநர்களுக்கு நாம் எதிரானவர்கள் அல்லர். வெளிநாட்டுப் பயிற்றுநர்களால் எமது வீரர்களுடன் சுதந்திரமாக உரையாட முடியாமைதான் எமது பிரச்சினையாகும்.
இவ்வீரர்கள் சிறப்பாக ஆங்கிலம் கற்றவர்கள் அல்லர். இதனால், வீரர்களும் பயிற்றுநர்களும் பரஸ் பரம் உரையாடுவதிலும் முழுமையாக புரிந்துகொள்வதிலும் சிரமத்தை எதிர்நோக் குகின்றனர்” எனவும் நஜாம் சேத்தி கூறி னார்.

-----------------------------------------------

Tamilus இன் பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களுடை நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !
If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !
Get in Touch With Us to Know More

கருத்துகள் இல்லை