• Breaking News

    'மைக்கலை நான் கொல்லவில்லை: அவரே அதை செய்துகொண்டார்' : டாக்டர் கொன்ராட் மறே கூறுகிறார்

    பொப்பிசை சக்கரவர்த்தி மைக்கல் ஜக்ஸனை தான் கொல்லவில்லை எனவும் அவர் தனக்குத்தானே அளவுக்கு அதிகமான செறிவுடைய மருந்தை பயன்படுத்திக்கொண்டதன்  மூலம் அவரின் மரணத்துக்கு காரணமானார் எனவும் மைக்கல் ஜக்ஸனின் பிரத்தியேக மருத்துவராகப் பணியாற்றிய டாக்டர் கொன்ராட் மறே தெரிவித்துள்ளார்.

    மைக்கல் ஜக்ஸனுக்கு அதிக செறிவுடைய மருந்தைக் கொடுத்து அவரின் மரணத்துக்கு காரணமாகிய குற்றச்சாட்டில், 4 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர் டாக்டர் கொன்ட்ராட் மறே. இத்தண்டனைக் காலத்தின் அரைப்பகுதியை சிறையில் கழித்தபின் 3 வாரங்களுக்குமுன் அவர் விடுதலையானார். அதன்பின் அவர் அளித்த செவ்வியிலேயே இத்தகவல்களை தெரிவித்துள்ளார்.

    மற்றவர்கள் எண்ணுவதைப் போல் அல்லாமல், மைக்கல் ஜக்ஸனும் தானும் மிகவும் ஒரு குடும்பமாக, சகோதரர்கள் போல் பழகியதாக டாக்டர் கொன்ராட் மறே கூறுகிறார்.  60 வயதான கொன்ராட் மறே இதய சிகிச்சை நிபுணராவார்.

    'எனது குடும்பத்தில் இப்போது நால்வர் மாத்திரமே இருக்கின்றனர். (பிள்ளைகளான) பரிஸ், பிரின்ஸ், பிளங்கெட் மற்றும் நீங்கள் டாக்டர் கொன்ராட்' என தனது மென்மையான குரலில் மைக்கல் ஜக்ஸன் தெரிவித்ததாக டாக்டர் கொன்ராட் நினைவுகூருகிறார்.

    மைக்கல் ஜக்ஸன் தனது வாழ்க்கையின் வேதனைகள், கவலைகள் குறித்து தன்னிடம் கூறிய தருணத்தில் அவர் தனது பிள்ளைகள் தவிர தான் நம்பிக்கைக்கொள்ளக்கூடிய நபர் ஒருவரை கண்டறிந்துவிட்டதாக உணர்ந்தவராகக் காணப்பட்டார் எனவும்' அது தனது வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியான ஒரு தருணம் எனவும் கொன்ராட் கூறியுள்ளார்.

    கலிபோர்னியாவின் பெவர்லி ஹில்ஸ் பகுதியில் மாதம் 1.27 கோடி ரூபா வாடகைக்கு பெறப்பட்டிருந்த வீடொன்றில் வைத்தே மைக்கல் ஜக்ஸனுக்கும் தனக்கும் இடையிலான மேற்படி உரையாடல் இடம்பெற்றதாக கொன்ராட் மறே தெரிவித்துள்ளார்.

    அந்த வீட்டில் மைக்கல் ஜக்ஸன் வசித்த மேல்மாடித் தளத்தில் தனது பிள்ளைகளையும் டாக்டர் கொன்ராட்டையும் தவிர வேறு எவரையும் மைக்கல் ஜக்ஸன் அனுமதிக்க மாட்டாராம்.

    சிலவேளை அவரின் படுக்கையில் துர்நாற்றம்வீசும். படுக்கைவிரிப்புகள் முதலானவற்றை முறையாக சுத்தமாக்காமையே இதற்குக் காரணம். மைக்கல்ஜக்ஸன் தனது வீட்டுப் பணிப்பெண்ணைக்கூட அங்கு வர அனுமதிப்பதில்லை' என கொன்ட்ராட் கூறுகிறார்.

    பணிப்பெண்களை உள்ளேவிட்டால் தனது பொருட்களை திருடிவிடுவார்கள் என அவர் எண்ணினார். அவரின் மிகப் பிரசித்தி பெற்ற வெள்ளைக் கையுறையை பல தடவை நான் கடந்து சென்றுள்ளேன்.  'பணிப்பெண்கள் உள்ளே வந்தால் இது காணாமல் போய்விடும் என மைக்கல் கூறுவார்' என்கிறார் கொன்ராட்.


    தனது மருத்துத் தொழிலில் தனக்கு வருடாந்தம் 23 லட்சம் டொலர் வருமானம் கிடைக்கும் என்பதால் முழுநேர மருதத்துவராக பணியாற்ற வருமாறு மைக்கல் ஜக்ஸன் விடுத்த அழைப்பை நீண்டகாலமாக டாக்டர் கொன்ராட் நிராகரித்தாhம்.

    எனினும், லண்டனில் ஆரம்பமாகவிருந்த தனது இசைச்சுற்றுலாக்காலத்தில் டாக்டர் கொன்ராட்டுக்கு ஒரு வருடகாலத்துக்கு மாதாந்தம் ஒரு லட்சம் டொலர் ஊதியம் வழங்க மைக்கல் ஜக்ஸன் முன்வந்ததால் அவருடன் பணியாற்ற ஒப்புக்கொண்டாரம்.

    எனினும், தான் பணத்துக்கு ஆசைப்படவில்லை எனவும் அரசர்கள், அரசிகள் போன்ற தான் சாதாரணமாக சந்திப்பதற்கு வாய்ப்பு கிடைக்காத மனிதர்களை சந்திப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என மைக்கல் ஜக்ஸன் உறுதியளித்தார் எனவும் டாக்டர் கொன்ராட் கூறுகிறார்.

    மைக்கல் ஜக்ஸன் குறித்த பல அந்தரங்கத் தகவல்களையும் டாக்டர் கொன்ட்ராட்வெளியிட்டுள்ளார்.

    'மைக்கல் ஜக்ஸனும் நானும் எந்தளவு நெருக்கமானவர்கள் எனத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா?. ஜக்ஸனுக்கு இரவில் சிறுநீர்கழிப்பதை கட்படுத்த முடியாதிருந்ததால் ஒவ்வொரு இரவும் நான் அவரின் உறுப்பில் சிறுநீர் கழிக்க உதவுவதற்காக பையொன்றைப் பொருத்தினேன். அந்தளவு நான் அவருக்கு நெருக்கமாக இருந்தேன். நான் அவரை கொல்வதற்கான தேவை எனக்கு இருக்கவில்லை' என்கிறார் டாக்டர் கொன்ராட்.

    தனது குடும்பத்தினரிடமிருந்து தான் வித்தியாசமாகத் தெரிய வேண்டுமென்பதற்காக வெள்ளை நிறத் தோலைப் பெறுவதற்கு மைக்கல்ஜக்ஸன் விரும்பினார். அதற்காக தோலை வெண்மையாக்கும் கிறீம்களை பயன்படுத்தினார் எனவும் தானும் அவருக்கு கிறீம் பூசிவிட்டுள்ளதாகவும் கொன்ராட் கூறியுள்ளார்.

    மைக்கல் ஜக்ஸன் ஓரின சேர்க்கை பழக்கமுடையவரா என்ற கேள்விக்கு  பதிலளிக்கையில், 'அவருக்கு கறுப்பு தலைமயிர் கொண்ட மெல்லிய பெண்களைப் பிடிக்கும். ஓரின சேர்க்கை பழக்கமுள்ள நபர்கள் பலர் தன்னிடம் அந்த உறவை ஏற்படுத்த முயற்சித்துப் பார்த்ததாகவும் இதனால் அவர் அசௌகரியங்களுக்குள்ளானதாகவும் என்னிடம் கூறியுள்ளார். அவர் ஓரின சேர்க்கை பழக்கம் கொண்டவர் என நான் எண்ணவில்லை. ஆனால் இதுகுறித்த பல பயங்கர அனுபவங்கள் அவருக்கு ஏற்பட்டுள்ளன' என டாக்டர் கொன்ராட் கூறியுள்ளார்.

    மைக்கல் ஜக்ஸனின் பிள்ளைகளில் ஒருவராவது தனக்குப் பிறந்தவர் என நடிகர் மார்க் லெஸ்டர் கூறியமை குறித்து கேட்கப்பட்டபோது, 'இது குறித்து நான் பேசவிரும்பவில்லை. மைக்கலின் பிள்ளைகள் கேட்டால், அவர்களிடம் பேசுவேன்' என டாக்டர் கொன்ராட் பதிலளித்துள்ளார்.

    Get in Touch With Us to Know More

    kindpng_1122282

    Brand-Center_-social-icons_join-us-community-icon_purple



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad