கோஹ்லி, ரோகித், தவான் முதலிடத்துக்கு கடும் போட்டி
2013ல் இதுவரை 31 போட்டிகளில் விளையாடியுள்ள கோஹ்லி 4 சதம், 7 அரை சதம் உட்பட 1237 ரன் குவித்து முதலிடத்தில் உள்ளார். சக இந்திய வீரர்கள் ரோகித் 25 போட்டிகளில் ஒரு இரட்டை சதம் உட்பட 1159 ரன் குவித்து 2வது இடத்திலும், தவான் 1150 ரன் குவித்து 3வது இடத்திலும் உள்ளனர். பாகிஸ்தானின் மிஸ்பா உல் ஹக் 4வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஜார்ஜ் பெய்லி 5வது இடத்திலும் உள்ளனர்.
அடுத்து தென் ஆப்ரிக்கா செல்லும் இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. அந்த போட்டிகளில் அதிக ரன் குவித்து முதலிடத்தை பிடிக்க கோஹ்லி, ரோகித், தவான் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. தற்போது ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடந்து வருவதால், ஆஸி. வீரர் பெய்லி மேற்கொண்டு முன்னேற வாய்ப்பில்லை. அதே சமயம், பாக். வீரர் மிஸ்பா இன்னும் 6 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளதால், முதல் இடம் பிடிக்க அவருக்கும் அதிக வாய்ப்பு உள்ளது.
ஒருநாள் ரன் குவிப்பு டாப் 5 வீரர்கள்
2013ல் இதுவரை நடந்துள்ள ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரர்களில் முன்னிலை வகிக்கும் முதல் 5 வீரர்கள் பற்றிய விவரம்:
வீரர் போட்டி ரன் அதிகம் சராசரி ரன்வேகம் 100 50
கோஹ்லி (இந்தியா) 31 1237 115* 56.22 98.17 4 7
ரோகித் (இந்தியா) 25 1159 209 55.19 82.14 2 8
தவான் (இந்தியா) 23 1150 119 54.76 98.12 5 4
மிஸ்பா (பாக்.) 28 1144 96* 49.73 71.58 0 12
பெய்லி (ஆஸி.) 22 1098 156 64.58 100 2 8
கருத்துகள் இல்லை