ஷாருக்கானை ஆட்டுவித்த பிரபுதேவா!
சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து ஷாருக்கான் நடித்து வரும் படம் ‘ஹேபி நியூ இயர்’.
ஷாருக்கானின் ‘ரெட் சில்லீஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்தப் பட்த்தை ஃபாராகான் இயக்கி வருகிறார்.ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே மீண்டும் ஜோடி சேரும் இப்படத்தில் அபிஷேக் பச்சனும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.நடன இயக்குனராக இருந்து இயக்குனராக புரொமோஷன் பெற்றவர் ஃபாராகான்.
பெரும்பாலான பாலிவுட் நடிகர் - நடிகைகளை நடனம் ஆட வைத்து அனுபவம் பெற்றுள்ள ஃபாராகான், தான் இயக்கும் படத்தின் ஒரு பாடல் காட்சியில் ஷாருக்கானை நடனம் ஆட வைக்க நம்ம ஊர் பிரபுதேவாவை அழைத்து, பட்டையை கிளப்பும் அந்த நடன காட்சியை படமாக்கியும் விட்டார்கள்! இந்தப் பாடல் காட்சியில் ஷாருக்குடன் பிரபுதேவாவும் ஆடியிருக்கிறார் இல்லையா… ஃபாராகான் மேடம்?
-----------------------------------------------
கருத்துகள் இல்லை