நகைச்சுவையிலும் நீங்கதான் “தல” - சந்தானம் புகழாரம்
அஜீத், தமன்னா, சந்தானம், பாலா, விதார்த், முனிஷ், சுஹில் நடித்து வந்த வீரம் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்து விட்டது. இதனை பட நிறுவனம் அறிவித்திருக்கிறது. படம் பொங்கலுக்கு வெளியாவதையும் உறுதி செய்திருக்கிறது. தற்போது பின்னணி இசைச் சேர்ப்பு பணிகள் துவங்கி இருக்கிறது. கடைசி கட்டமாக அஜீத், சந்தானம் இணைந்து நடித்த நகைச்சுவைக் காட்சிகள் படமாக்கப்பட்டது. "பொதுவாக சந்தானம் நடிக்கும்போது உடன் நடிப்பர்கள் ரொம்ப தயங்குவார்கள். சந்தானத்தின் நேரநகைச்சுவையில் அவர்களும் சிரித்து விடுவார்கள். இதனால் நிறைய எடுகைகள் எடுத்துக்கொளவார்கள். ஆனால் தல அஜீத் நடிக்கும்போது சந்தானம் திணறிவிட்டார். சில காட்சிகளில் அவரே சிரித்து விட்டார். தல நகைச்சுவையிலும் நீங்கதான் தல என்றார் சந்தானம். நாங்களே தல இந்த அளவுக்கு நகைச்சுவை செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை. படத்தில் அவரது நகைச்சுவைகள் ரொம்ப பேசப்படும்" என்கிறார் இயக்குநர் சிவா.
கருத்துகள் இல்லை