அடுத்து ஜெயம் ரவியுடன் கைகோர்க்கும் நயன்
சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வந்த நிமிர்ந்து நில் முடிவடைந்த நிலையில் தனது அடுத்தப் படத்துக்கான தயாரிப்புகளில் ஜெயம் ரவி இறங்கியிருக்கிறார். நிமிர்ந்து நில் ஜெயம் ரவிக்கு முக்கியமான படம். அமீரின் ஆதி பகவன் தந்த அடியை நிமிர்ந்து நில்தான் சரி செய்ய வேண்டும். தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் சமுத்திரக்கனி படத்தை இயக்கியிருக்கிறார். தமிழில் படத்தை எடுத்த பின் தெலுங்கில் மாற்றஞ் செய்து, இரு மொழிப் படம் என்கிற பூச்சு வேலையெல்லாம் இல்லை. தெலுங்கில் இதே கதையில் நவீன் பாபு என்கிற “நானி” நடித்திருக்கிறார். ஆனால் இரண்டு மொழிகளுக்கும் ஒரே நாயகி, அமலா பால். இதை அடுத்து ஆரம்பிக்க இருக்கும் புதுப்படத்தில் நயனுடன் சோடி ஜெயம் ரவி சேர்வதாக முடிவாகியுள்ளது. படத்திற்கான கதை , இயக்குநர் முடிவாகாத நிலையிலும் நாயகித் தெரிவை முடித்துவிட்டார் ஜெயம் ரவி.
-----------------------------------------------
கருத்துகள் இல்லை