அசத்திய மோகன்லால், நெகிழ்ந்த விஜய்
ஜில்லா படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்துள்ளார் மோகன்லால். படப்பிடிப்பின்போது இருவரும் நெருக்கமாகிவிட்டார்களாம். இந்நிலையில் விஜய், மோகன்லாலை தனது வீட்டிற்கு விருந்துக்கு அழைத்துள்ளார். விஜய்யின் அழைப்பை ஏற்று தனது குடும்பத்தினருடன் மோகன்லால் , விஜய் வீட்டுக்கு விருந்துக்கு சென்றுள்ளார். விருந்தில் லால் ஏட்டன் குடும்பத்தாரை அசத்தியுள்ளனர் விஜய் குடும்பத்தினர். அசந்துபோன மோகன்லால், விஜய் குடும்பத்தாரை தங்கள் வீட்டுக்கு விருந்துக்கு வருமாறு அழைத்துள்ளார். லாலின் அழைப்பை ஏற்று விஜய் தனது குடும்பத்தாருடன் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் இருக்கும் மோகன் லால் வீட்டுக்கு சென்றுள்ளார். விருந்தில் கேரளத்து பாரம்பரிய உணவு வகைகளை வைத்து லால் ஏட்டன் அசத்திவிட்டாராம்,விருந்து முடிந்த உடன் தன் கையால் வரை ஆறடி ஓவியத்தை மோகன்லால் விஜய்க்கு பரிசளித்துள்ளார். அவர் விஜய்யைதான் ஓவியமாக வரைந்து கொடுத்த அந்த பரிசை பார்த்த விஜய் நெகிழ்ந்துவிட்டாராம்.
-----------------------------------------------
கருத்துகள் இல்லை