113 ஓட்டங்களினால் இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் பாகிஸ்தான் அணி 113 ஓட்டங்களினால் அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்திருந்தது.இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறையில் 5 விக்கெட்டுக்களை இழந்து 326 ஓட்டங்களை குவித்தது.
பெரு வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 44.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 213 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியடைந்துள்ளது.
ஐந்து ஒருநாள் போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில் 2:1 என்ற அடிப்படையில் பாகிஸ்தான் அணி முன்னிலையில் உள்ளது.இரு அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் சர்வதேச போட்டு எதிர்வரும் 25ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
-----------------------------------------------
கருத்துகள் இல்லை