ஆஸ்திரேலியா 2–வது டெஸ்ட்: இங்கிலாந்து 172 ரன்னில் சுருண்டது
ஆஸ்திரேலியா– இங்கிலாந்து அணிகள் மோதும் ஆசஷ் தொடரின் 2–வது டெஸ்ட் அடிலெய்ட்டில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 570 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் கிளார்க் 148 ரன்னும், ஹாடின் 118 ரன்னும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் பிராட் 3 விக்கெட்டும், ஸ்டோக்ஸ், பிராட் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.ஆசஷ் 2–வது டெஸ்ட்: இங்கிலாந்து 172 ரன்னில் சுருண்டது
பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து நேற்றைய 2–வது நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 35 ரன் எடுத்து இருந்தது.
இன்று (சனிக்கிழமை) 3–வது நாள் ஆட்டம் நடந்தது. இங்கிலாந்து அணி தொடர்ந்து ஆடியது.
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீரர் மிச்சேல் ஜான்சனின் அபாரமான பந்து வீச்சால் இங்கிலாந்து விக்கெட்டுகளை இழந்து திணறியது.ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ஜோரூட் (15 ரன்) விக்கெட்டை லயன் கைப்பற்றினார். அதனைத் தொடர்ந்து பீட்டர்சன் 4 ரன்னில் சிடில் பந்திலும், தொடக்க வீரர் கார்பெரி 60 ரன்னில் வாட்சன் பந்திலும் ஆட்டம் இழந்தனர்.
ஜான்சனின் ஒரே ஓவரில் 3 விக்கெட் கைப்பற்றி முத்திரை பதித்தார். 50–வது ஓவரின் முதல் பந்தில் ஸ்டோக்ஸ் (1), 5–வது பந்தில் பிரையர் (0), கடைசி பந்தில் பிராட் (0) ஆட்டம் இழந்தனர். தொடர்ந்துஅவர் ஆதிக்கம் செலுத்தினார்.55–வது ஓவரில் அவர் மேலும் 2 விக்கெட் கைப்பற்றினார். 5–வது பந்தில் சவான் (7 ரன்) விக்கெட்டையும், கடைசி பந்தில் ஆண்டர்சனையும் (0) கைப்பற்றினார். 135 ரன்னில் இங்கிலாந்து 9 விக்கெட்டை இழந்தது.
கடைசி விக்கெட்டாக பெல்– பனேசர் ஜோடி சிறிது நேரம் தாக்கு பிடித்தது. பனேசர் (2 ரன்) ஜான்சன் பந்தில் போல்டு ஆனார். இங்கிலாந்து 172 ரன்னுக்கு ஆல்–அவுட் ஆனது. பெல் 72 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஜான்சன் 40 ரன் கொடுத்து 7 விக்கெட் கைப்பற்றினார்.இங்கிலாந்து அணிக்கு பாலோஆன் கொடுக்காமல் 398 ரன் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2–வது இன்னிங்சை விளையாடி வருகிறது.
-----------------------------------------------
கருத்துகள் இல்லை