தூம் 3 – விமர்சனம் மற்றும் முன்னோட்டம்
ஒரு தனி மனிதனின் கோபம் தான் இந்த தூம் 3. சிகாகோவில் ஒரு பெரிய சர்க்கஸ் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார் ஜாக்கி ஷெராப். வங்கியில் கடன் வாங்கி இந்த சர்க்கஸை நடத்தி வரும் அவர் ஒரு கட்டத்தில் சர்க்கஸ் நிகழ்ச்சிகளை சரியாக நடத்த முடியாமல் வங்கியின் மூலம் தனது சர்க்கஸை மூடும் நிலைக்கு தள்ளப்படுகிறார். ஜாக்கி ஷெராபின் மகனாக ஆமிர் கான். இப்படி தன் உயிராக நினைத்து வாழ்ந்து வந்த சர்க்கஸை மூட வைத்துவிட்டார்களே என மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் அந்த வங்கியின் மிது கடும் கோபம் கொள்ளும் ஆமிர் கான் அந்த வங்கியை எப்படி பழிவாங்குகிறார் என்பதே கதை.
ஆமிர் கான் ஒவ்வொரு முறையும் வங்கியில் திருடும் காட்சிகள் ஹாலிவுட் தரத்துக்கு நம் இந்திய சினிமாவை உயர்த்தி காட்டுகிறது. தொடர்ந்து ஒரே வங்கியில் திருடும் ஆமிர் கான் ஒரு இந்தியன் என்பதை கண்டறிந்து இந்தியாவில் இருந்து இரண்டு ஸ்பெஷல் போலீஸான அபிஷேக் பச்சன் மற்றும் உதய் சோப்ரா ஆகிய இருவரை சிகாகோவிற்கு வரவழைக்கிறது அந்த வங்கி. அந்த திருடனை பிடிக்கனும்னா மறுபடியும் அவனை திருட வைக்கனும் என்று திட்டம் போடுகிறார். திருடனை பிடிக்க போஸீஸ் ஒரு பக்கம் திட்டம் தீட்ட, வங்கியில் கொள்ளை அடிக்க ஆமிர் கான் ஒரு பக்கம் திட்டம் தீட்ட என பரபரப்பான திரைக்கதையால் நம்மை சீட்டின் நுனியில் உட்கார வைக்கிறார்கள்.
இப்படி வங்கியில் கொள்ளையடிக்கும் பணத்தின் மூலம் அதே சர்க்கஸ் நிகழ்ச்சியை சிகாகோவில் துவங்குகிறார் ஆமிர் கான். வங்கியில் கொள்ளையடிக்கும் பணத்தில் தனக்கு தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டு மீதி பணத்தை வீதியில் பறக்கவிட்டு செல்வதும், ஒரு கட்டத்தில் வங்கியில் கொள்ளையடித்துவிட்டு தப்பிக்கும் போது அபிஷேக் பச்சனால் சுடப்படுகிறார் ஆமிர் கான். இருந்தாலும் போலீஸிடம் சிக்காமல் சாமர்த்தியமாக தப்பிப்பது சூப்பர். தான் சுட்ட அந்த திருடன் ஆமிர் கான் தான் என்று உறுதி செய்து அவரை கைது செய்ய சர்க்கஸுக்கு செல்கிறார். அங்கே அவரை சட்டையை கழட்டி காட்டச் சொல்ல அந்த த்ரில்லர் நம் மனதிலும் பக்… பக்… பக்… என்று அடிக்க வைக்கிறது. ஆனால் குண்டடி பட்டதற்கான ஒரு அடையாளமும் இல்லாமல் அமீர் கான் இருப்பது எப்படி என்று புரியாமல் ஏமாற்றத்துடன் செல்கிறார் அபிஷேக் பச்சன். அதே கேள்வியோடு உட்கார்த்திருக்கும் நமக்கும் ஒரு அதிர்ச்சியை தருகிறது அடுத்த காட்சி படத்தின் பெரிய சஸ்பென்ஸே அது தான். ஒரு இடத்தில் மறந்து மற்றொரு இடத்தில் தோன்றுவது என்பது கண் கட்டி வித்தை மக்களை ஏமாற்றும் செயல் என்பதை அந்த சர்க்கஸ் நிகழ்ச்சி மூலம் தெளிவாக காட்டியிருக்கிறார்கள்.
கதாபத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் ஆமீர் கான், அவரின் கோபம், சந்தோஷம் ஆகிய இரண்டிலும் வெவ்வெறு ஆமிர் கானை பார்க்க முடிகிறது. கேத்ரினா கைஃப்க்கு அப்படி ஒன்றும் முக்கியதுவம் கொடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இருந்தாலும் அவரின் கவர்ச்சி, அந்த லிப் டு லிப் முத்த காட்சி என அவரின் பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார். அபிஷேக் பச்சன் தனது கம்பீரமான போலீஸ் திமிருடன் வந்து கைத்தட்டல் வாங்கியிருக்கிறார். காமெடிக்கு உதய் சோப்ரா முன் பாகத்தில் பார்த்த அதே காமெடிதான் புதிதாக ஒன்றும் இல்லை.
ப்ரீதம் சக்ரபொர்த்தி இசையில் சிறப்பான பாடல்களும், பின்னணி இசையும் கலக்கியிருக்கிறார்.தூம் வரிசையில் வந்த இந்த தூம் 3 எந்த விதத்திலும் தொய்வடைய வில்லை அதே கம்பீரத்துடன் வெற்றியை நிலைநாட்டியிருகிறது.
கருத்துகள் இல்லை