ஒரே படத்தில் 5 இசை அமைப்பாளர்கள் 7 பாடகர்களும், 6 பாடகிகளும், 5 பாடலாசிரியர்கள் அறிமுகம்....
புதியவர்கள் இணைந்து வடக்கும் தெற்கும் என்ற படத்தை எடுத்து வருகிறார்கள், அம்ரீஷ், பிரியங்கா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவியை தமிழ் நாட்டு மாணவன் காதலிக்கிற கதை. பீகார் மாநில போலீஸ் அதிகாரியின் மகளை காதலிப்பதால் அவர் காதலர்களை துரத்த காட்டுக்குள் ஓடுகிறார்கள். அங்கு மாறப்பன் என்ற தீவிரவாதியிடம் மாட்டுகிறார்கள். மாறப்பன் பீகார் போலீஸ் அதிகாரியால் பாதிக்கப்பட்டவன். இந்த இருவரிடமிருந்தும் காதலர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் படத்தோட ஸ்கிரீன் ப்ளே.
நாயகி பீகார் பொண்ணு என்பதால் நிஜமாகவே பீகாரைச் சேர்ந்த பிரியங்கா நடிக்கிறார். இந்தப் படத்தை ஜி.ராஜேந்திரன் என்பவர் டைரக்ட் செய்கிறார். அப்ருபியன், கார்த்திக் ஆச்சார்யா, தீசன், சூரிய பிரசாத், ராஜேஷ் என்ற 5 இசை அமைப்பாளர்கள் அறிமுகமாகிறார்க்ள. மீனாட்சி சுந்தரம், உமா சங்கர், பஞ்சோந்தி, கணேஷ், பைசு என்ற 5 பாடலாசிரியர்கள் அறிமுகமாகிறார்கள். இவர்கள் தவிர 7 பாடகர்களும், 6 பாடகிகளும் அறிமுகமாகிறார்கள்.
கருத்துகள் இல்லை