50 லட்சத்தை திருப்பி வாங்காமல் பைசூலை விட மாட்டேன் !
சுந்தரா டிராவல்ஸ், மானஸ்தன், அடாவடி உள்பட பல படங்களில் நடித்தவர் ராதா. இவர் தொழிலதிபர் பைசூல் என்பவர், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி செக்ஸ் வைத்துக்கொண்டதோடு, தன்னிடமிருந்து 50 லட்சம் பணத்தையும் மோசடி செய்து விட்டதாக சமீபத்தில் சென்னை கமிஷனர் அலுவகத்தில் பரபரப்பு புகார் அளித்திருந்தார். ஆனால், பைசூலை போலீசார் கைது செய்வதற்கு முன்பே அவர் முன்ஜாமீன் வாங்கி விட்டார். ஆனால் அவருக்கு ஜாமீன் வழங்க நடிகை ராதா எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து அந்த மனு விசாரணை வருகிற 4-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எனது நகைகளை விற்றும், ஆந்திராவிலுள்ள வீட்டை விற்றும் பைசூலுக்கு 50 லட்சம் பணம் கொடுத்தேன் என்று கூறி வரும் ராதா, இந்த விசயம் பெரிதாகி விட்டதால், இப்போது என்னை சமாதானம் செய்ய பைசூல் முயற்சி எடுத்து வருகிறார். ஆனால், எனது 50 லட்சம் பணத்தை பைசூலிடமிருந்து பைசல் செய்யும் வரை நான் அவரை விடப்போவதில்லை என்று கூறியுள்ளார் ராதா.மேலும், தன் மீது தவறு இல்லை என்று சொல்லும் பைசூல் எதற்காக தலைமறைவாக இருக்க வேண்டும். அவரே முன்வந்து தான் நிராபராதி என்பதை நிரூபிக்கலாமே என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் அவர்.
-----------------------------------------------
கருத்துகள் இல்லை