"ஜில்லா" பிரமாண்டம், "வீரம்" வித்தியாசம்
சென்னை - அஜீத்தின் வீரம் படத்தில் வரும் அறிமுகப் பாடலை வித்தியாசமாக எடுத்துள்ளார்களாம்.தல ரசிகர்களும், தளபதி ரசிகர்களும் ஏக குஷியாக இருக்கிறார்கள். காரணம் இந்த பொங்கலுக்கு விஜய்யின் ஜில்லா, அஜீத்தின் வீரம் ரிலீஸாவது தான். இந்த பொங்கலை தங்களுக்கு பிடித்த நடிகர்களின் படத்தோடு கொண்டாட தற்போதே தயாராகி வருகின்றனர்.இந்நிலையில் அஜீத்தின் வீரம் படத்தின் அறிமுக பாடல் குறித்து சில தகவல் கிடைத்துள்ளது.
அறிமுக பாடல் படத்தில் வரும் முதல் பாடலில் அஜீத் மற்றும் அவரது தம்பிகளான விதார்த், சுஹைல், பாலா மற்றும் முனீஷ் ஆகியோர் அறிமுகம் செய்து வைக்கப்படுகின்றனர்.
டான்ஸ், ஆக்ஷன் அறிமுக பாடலில் ஏதாவது வித்தாயசத்தை கொண்டு வர விரும்பினார் இயக்குனர் சிவா. இதையடுத்து அந்த பாடலில் டான்ஸோடு சேர்ந்து ஆக்ஷன் காட்சிகளையும் படமாக்கியுள்ளார்களாம்.
சிவா அறிமுக பாடலில் ஸ்டண்ட் மாஸ்டர் செல்வம் மற்றும் டான்ஸ் மாஸ்டர் பிரேம் ரக்ஷித் ஆகியோர் சேர்ந்து பணியாற்றி பாடலை வித்தியாசமாக படமாக்கியுள்ளதாக சிவா தெரிவித்தார். படத்திற்கு துள்ளல் இசைக்கு பெயர்போன தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
பிரமாண்ட ஜில்லா - ஜில்லா படத்தில் வரும் அறிமுக பாடலில் விஜய், மோகன்லாலுடன் சேர்ந்து 80 டான்சர்கள் மற்றும் 1000 ஜூனியர் ஆர்டிஸ்ட்கள் ஆடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-----------------------------------------------
கருத்துகள் இல்லை