கே.வி.ஆனந்த் உடன் இணைகிறார் ரஜனி
கே.வி.ஆனந்த், ரஜினி சந்திப்பின் போதே ரஜினி, கே.வி.ஆனந்தின் இயக்கத்தில் நடிக்கிறார் என பேசப்பட்டது. இதுகுறித்து கேட்ட போது, ரஜினியை இயக்க யாருக்குதான் ஆசையில்லை. சரியான கதை அமைந்தால் இயக்கலாம் என்றும், அப்படி ஒன்று நடந்தால் நானே அறிவிப்பேன் எனவும் மழுப்பலான பதிலளித்தார் கே.வி.ஆனந்த்.
கோச்சடையான் முடிந்த நிலையில் ரஜினியின் அடுத்தப் படம் எது என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது. அடுத்தப் படத்தை இயக்கப் போவது ஷங்கரா இல்லை கே.வி.ஆனந்தா?
கே.வி.ஆனந்தும், எழுத்தாளர்கள் சுபாவும் இணைந்து ரஜினிக்கான கதையை தயார் செய்திருப்பதாகவும், ரஜினியின்அடுத்தப் படமாக அது இருக்கும் எனவும் கூறுகிறார்கள்.
அயன், கோ படங்களின் வெற்றியும், அதன் கமர்ஷியல் அம்சங்களும் ரஜினியை வெகுவாக கவர்ந்ததால்தான் கே.வி.ஆனந்தை அவர் தேர்வு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
கோச்சடையானின் வெளியீட்டிற்க்கு முன்பே ரஜினியின் அடுத்தப் படம் குறித்து அறிவிப்பு வர வாய்ப்புள்ளது.
-----------------------------------------------
கருத்துகள் இல்லை