பிரண்டன் மெக்கலம், டெய்லர் சதம் - வலுவான நிலையில் நியூஸிலாந்து
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் பிரண்டன் மெக்கலம் மற்றும் ரொஸ் டெய்லரின் சதத்துடன் 3 விக்கெட்களை இழந்து 367 ஓட்டங்களைப் பெற்ற நியூஸிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது.
நியூஸிலாந்தின் டியூன்டினில் இன்று ஆரம்பமான முதல் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி முதலில் துடுபெடுத்தாடியது.
ஆரம்பவீரர்களான புல்டன் 61 ஓட்டங்களையும் ரதபோர்ட் 62 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர். பின்னர் இணைந்து கொண்ட அணித் தலைவர் பிரண்டன் மெக்கலம் மற்றும் ரொஸ் டெய்லர் ஜோடி பிரிக்கப்படாத இணைப்பாட்டமாக முதல் நாள் முடிவில் 182 ஓட்டங்களைப் பெற்றனர்.
பிரண்டன் மெக்கலம் ஆட்டமிழக்காது 109 ஒட்டங்களைப் பெற்று டெஸ்ட் போட்டிகளில் தனது 6ஆவது சதத்தினைப் பூர்த்திசெய்துள்ளார். கடந்த 3 வருடங்களில் பிரண்டன் மெக்கலம் முதல் சதம் இதுவாகும்.
ரொஸ் டெய்லர் ஆட்டமிழக்காது 103 ஓட்டங்களைப் பெற்று 9 டெஸ்ட் சத்தினைப் பெற்றார்.பந்து வீச்சில் மேற்கிந்திய அணியின் டெரன் சமி, டினோ பெஸ்ட், ஷிலிங்போர்ட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர். நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.
-----------------------------------------------
கருத்துகள் இல்லை