சமந்தாவை செக்கப் செய்ய டாக்டரை ஏற்பாடு செய்த சூர்யா
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இதன் முதல்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடக்கிறது. இந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்தகட்டமாக கோவா செல்ல உள்ளனர்.
மும்பையில் சூர்யா நடிக்கும் ஒரு பாடல் காட்சி ரூ.80 செலவில் அமைக்கப்பட்ட ஒரு செட்டில் வைத்து எடுக்கப்படுகிறது. அந்த பிரமாண்டமான செட்டில் வெறும் ஐந்து நாட்கள் மட்டுமே பாடல்காட்சிகள் எடுக்கப்பட்டது. இந்த பாடலுக்கான நடனத்தை ராஜு சுந்தரம் அமைத்தார்.யுவன்ஷங்கர்ராஜாவின் இசையமைப்பில் சூர்யாவின் அறிமுகப்பாடல்தான் இங்கு படமாக்கப்பாட்டுள்ளது. ரஞ்சித் இந்த பாடலை பாடியுள்ளார்.
இந்த பாடலுக்கு சூர்யாவும், சமந்தாவும் போட்டி போட்டுக்கொண்டு ஆட்டம் போட்டார்கள். சமந்தா படப்பிடிப்புக்கு வரும்போது கையோடு ஒரு டாக்டரையும் அழைத்து வந்துள்ளாராம். தற்போது தோல் நோயினால் அவதிப்பட்டு வரும் சமந்தாவை உடனுக்குடன் செக்கப் செய்ய இந்த டாக்டர்தான் உதவுகிறாராம்.
மும்பையில் உள்ள இந்த டாக்டர் சூர்யாவின் பள்ளித்தோழர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய ஆலோசனையின் பேரில்தான் சமந்தா, இந்த டாக்டரை உடன்வைத்துக்கொள்கிறாராம். மும்பையில் படப்பிடிப்பு முடியும் வரை இந்த டாக்டர் சமந்தாவை அருகில் இருந்து கவனித்துக்கொள்வார் என தெரிகிறது.
-----------------------------------------------
கருத்துகள் இல்லை