ஜோதிகா போல் ‘கண்களால் கவிதை பேச ஆசைப்படும்’ லட்சுமிமேனன்
நடிகை லட்சுமிமேனன் தனது ரோல் மாடல் ஜோதிகாப் போல் கண்களால் நடிப்பை வெளிப்படுத்த முயற்சி செய்கிறாராம். கும்கி, சுந்தரப் பாண்டியன், குட்டிப்புலி மற்றும் பாண்டியநாடு போன்ற வெற்றிப்படங்களில் நடித்தவர் நடிகை லட்சுமி மேனன். மலையாள வரவான லட்சுமிமேனன், தான் இதுவரை நடித்துள்ள படங்களில் தனது திறமையான நடிப்பின் மூலம் பிரபலமானவர். கண்களால் உணர்ச்சிகளைக் காட்டும் அவரது ரோல் மாடல் நடிகை ஜோதிகா தானாம்.
பிரபு சாலமனின் கும்கி படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை லட்சுமிமேனன். ஆனால், அவரது சுந்தர பாண்டியன் படமே முதலில் திரைக்கு வந்தது.தற்போது பதினோராம் வகுப்பு படித்து வரும் லட்சுமிமேனன், தனது முதல் படமான கும்கியில் யானையைக் கண்டு மிரண்டு ஓடும் காட்சிகளில் கண்களில் அப்படியொரு பிரமிப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் லட்சுமிமேனன்.
கண்களில் உணர்ச்சிகளில் வெளிப் படுத்தும் வித்தையை நடிகை ஜோதிகாவைப் பார்த்துத் தான் கற்றுக் கொண்டாராம் லட்சுமிமேனன். சினிமாவில் இவரது ரோல் மாடல் என்றால் அது ஜோதிகா தானாம்.கண்களில் உணர்ச்சிகளில் வெளிப் படுத்தும் வித்தையை நடிகை ஜோதிகாவைப் பார்த்துத் தான் கற்றுக் கொண்டாராம் லட்சுமிமேனன். சினிமாவில் இவரது ரோல் மாடல் என்றால் அது ஜோதிகா தானாம்.
ஜோதிகாவின் நடிப்புக்காகவே காக்க காக்க, சந்திரமுகி படங்களை பலமுறை பார்த்து லயித்திருக்கிறாராம் லட்சுமிமேனன்.சமீபத்தில் வெளியாகி வெற்றி நடை போட்ட பாண்டிய நாடு படத்தில் விஷால் ஜோடியாக நடித்திருந்தார் லட்சுமிமேனன். அப்படத்தில் ஆசிரியராக வரும் லட்சுமிமேனன், அசப்பில் அப்படியே நடை, உடை பாவனைகளில் ‘காக்க காக்க' ஜோதிகாவை ஞாபகப் படுத்தியது குறிப்பிடத்தக்கது.அதேபோல், தற்போதுள்ள நடிகைகளில் ஜோதிகாவிற்குப் பிடித்த நடிகை லட்சுமிமேனன் தானாம்.
-----------------------------------------------
கருத்துகள் இல்லை