தென் ஆபிரிக்க அணிகளுக்கு இலகு வெற்றி
இந்தியா - தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையில் நேற்று ஜோஹன்னஸ்பேர்க் மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது ஒரு நாள் போட்டியில் தென் ஆபிரிக்க அணி 141 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய தென் ஆபிரிக்க அணி 4 விக்கெட் இழப்புக்கு 358 ஓட்டங்களை எடுத்தது. விக்கெட் கீப்பரும் இளம் கிரிக்கெட் வீரருமான குவாந்தன் தி கொக் 121 பந்துகளில் 18 பவுன்றிகள், 3 சிக்ஸர் அடங்களாக 135 ஓட்டங்களை எடுத்தார். வில்லியர்ஸ் 77 ஓட்டங்களையும் டுமினி 59 ஓட்டங்களையும் எடுத்தனர். பந்துவீச்சில் மொஹ்மட் சமி 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
பதிலுக்கு களமிறங்கிய இந்திய அணி ஆரம்பத்திலேயே விக்கெட்டுக்களை இழந்தது. ரோகித் ஷர்மா, சுரேஷ் ரைனா ஆகியோர் ரன் அவுட்டில் ஆட்டமிழந்தது இந்தியாவுக்கு மேலும் இழப்பை ஏற்படுத்தியது. இறுதியில் தோனி மாத்திரம் 65 ஓட்டங்களை எடுத்தார். ஏனையோர் குறைவான ஓட்டங்களுடனேயே ஆட்டமிழந்ததால் இந்திய அணி 41 ஓவர்களில் 217 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.
தென் ஆபிரிக்காவின் பந்துவீச்சில் ஸ்டைன் 3 விக்கெட்டுக்களையும், மெக்லரென் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். இப்போட்டியில் வென்றதன் மூலம் தென் ஆபிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. மார்பக புற்றுநோய் தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நேற்றைய போட்டியில் தென் ஆபிரிக்க அணி ஊதா நிற உடையுடன் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
-----------------------------------------------
கருத்துகள் இல்லை