சம்பளம் வேண்டாம் ஜில்லா படம் மலையாளத்தில் வெளியிடும் உரிமை வேண்டும் - மோகன் லல்
தமிழில் சிறைச்சாலை, இருவர், பாப்கார்ன், உன்னைப்போல் ஒருவன் உள்பட பல படங்களில் நடித்திருக்கிறார் மலையாள நடிகர் மோகன்லால். இந்நிலையில, தற்போது விஜய் நடித்துள்ள ஜில்லா படத்தில் அவரது தந்தையாக நடித்திருக்கிறார். மலையாளத்தில் தான் அதிகமான படங்களில் நடித்துள்ள கதர் வேஷ்டி-சட்டை கெட்டப்பில் நடித்திருக்கும் மோகன்லால், இந்த கெட்டப்பில் நான் நடித்த எல்லா படங்களுமே ஹிட்டாகி உள்ளன. அதனால் ஜில்லாவும் ஹிட்டாவது உறுதி என்று கூறி வருகிறார். இந்த நிலையில், இப்படத்தை மலையாளத்தில் வெளியிடும் உரிமையை தனக்கே தர வேண்டும் என்று ஆரம்பத்திலேயே பேசி விட்டாராம் மோகன்லால். அதோடு, விஜய்க்கும் மலையாள ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால் இப்படம் தமிழைப்போலவே மலையாளத்திலும் மெகா ஹிட்டாகும் என்பது மோகன்லாலின் கூடுதல் நம்பிக்கையாகி விட்டது.
அதனால் தமிழில் வெளியாகும் அதேநாளில் கேரளாவிலும் வெளியிட திட்டமிட்டுள்ள மோகன்லால், மிகப்பெரிய அளவில் பப்ளிசிட்டியை முடுக்கி விடுகிறாராம். மேலும், இப்படத்தில் நடிக்க மோகன்லால் சம்பளமே வாங்கிக்கொள்ளவில்லை என்றொரு தகவல் வெளியாகியிருக்கிறது. அதுபற்றி விசாரித்தபோது, உண்மைதான் என்கிறார்கள. ஆனால் தான் வாங்க வேண்டிய 4 கோடி சம்பளத்துக்கு பதிலாகத்தான் கேரளா உரிமையை வாங்கியிருக்கிறாராம். அதேசமயம் இந்த படம் அவருக்கு டபுள் மடங்கு வசூலித்துக்கொடுக்கும் என்றும் கூறுகிறார்கள்
-----------------------------------------------
கருத்துகள் இல்லை