சங்கக்கார, மஹேலவுக்கு விருது
இலங்கை அணி வீரர் குமார் சங்கக்கார சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருதை (ODI Cricketer of the year award) வென்றுள்ளார். இந்த விருதுக்காக ஷகீட் அஜ்மல், இந்திய அணித் தலைவர் மஹேந்திர சிங் தோனி, ஷிகார் தவான் உள்ளிட்ட வீரர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இலங்கை அணியின் மற்றுமொரு வீரரான மஹேல ஜெயவர்த்தன துடிப்பு மிக்க கிரிக்கெட் வீரருக்கான விருதை (Spirit of Cricket award) தனதாக்கியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி டெஸ்ட் போட்டிகளின் சிறந்த வீரருக்கான விருதை அவுஸ்திரேலிய வீரர் மைக்கள் கிளார்க் வென்றுள்ளார்.
அத்துடன் பெண்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் சிறந்த வீராங்கனைக்கான விருதை சுசி பேட்ஸ் (Suzie Bates) தனதாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-----------------------------------------------
கருத்துகள் இல்லை