சரத்குமார் அர்ஜுன்பால், இஷிதா, நிகிதா நடிக்கும் "நறுமுகை" திரைப்படம்....
சரத்குமார் நடிக்கும் நறுமுகை என்ற திரைப்படம் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகிறது. அவருடன் அர்ஜுன்பால், இஷிதா, நிகிதா என்ற நியூபேஸ்களும் நடிக்கிறார்கள். சரத்குமார் மலேசிய போலீஸ் அதிகாரியாகவும், மனோஜ் கே.ஜெயன் மலேசிய டாக்சி டிரைவராகவும் நடிக்கிறார்கள்.
கோவையில் இசைக் குழு நடத்தி வரும் இளைஞன் ஆகாஷ் மலேசியாவுக்கு நிகழ்ச்சி நடத்த சென்றபோது அங்கேயே பிறந்து வளர்ந்த இஷிதாவை காதலிக்கிறார். இதைத் தொடர்ந்து அங்கு ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். அதிலிருந்து அவரை சரத்குமார் மீட்பது போலவும், அந்த சிக்கலுக்கு காரணமானவர் கார் டிரைவர் மனோஜ் கே.ஜெயன் என்பது போலவும் செல்கிற கதை.
80 பேர் கொண்ட குழு ஒரு மாதமாக மலேசியாவில் தங்கியிருந்து 80 சதவிகித படப்பிடிப்பை முடித்திருக்கிறார்கள். மீதி 20 சதவிகிதம் கோவையில் படமாக்கப்பட இருக்கிறது. தமிழ், மலையாளம் இரண்டு மொழிகளிலும் படத்தை இயக்குகிறவர் மேஜர் ரவியின் உதவியாளர் ஜான் ராபின்சன். தமிழ் போர்ஷனுக்காக கோவையிலும், மலையாள போர்ஷனுக்காக எர்ணாகுளத்திலும் படப்பிடிப்பு நடத்துகிறார்கள்.
-----------------------------------------------
கருத்துகள் இல்லை