ஜிபிஎஸ் தோட்டா இனி காரில் தப்பும் குற்றவாளிகளை இலகுவாக கண்டு பிடிக்கலாம்
காரில் தப்பிச் செல்லும் குற்றவாளிகளை மிக எளிதாக மடக்கிப் பிடிப்பதற்கான ஜிபிஎஸ் தோட்டாவை அமெரிக்காவே சேர்ந்த ஸ்டார் சேஸ் எனும் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. காரில் தப்பும் குற்றவாளிகளை போலீசார் துரத்திப் பிடிப்பது மிக சவாலான விஷயமாக இருக்கிறது. போலீசாரை கண்டதும் தாறுமாறாக காரை ஓட்டும் குற்றவாளிகளால் அப்பாவிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. இதனை தவிர்க்கும் வகையில் குற்றவாளி தப்பிச் செல்லும் காரை துல்லியமாக கண்காணிக்கும் விதத்தில் இந்த புதிய ஜிபிஎஸ் தோட்டா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சிறிய ஜிபிஎஸ் கருவியை உள்ளடக்கிய குண்டுதான் இதில் பயன்படுத்தப்படுகிறது. இதனை குற்றவாளி தப்பிச் செல்லும் காரில் போலீசார் துப்பாக்கி மூலம் செலுத்தி ஒட்டிவிட்டால் போதும். ஜிபிஎஸ் தோட்டா ஒட்டப்பட்ட கார் எங்கு, எவ்வளவு வேகத்தில் செல்கிறது என்பதை காவல்துறையினரின் கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணித்து அந்த காரை அருகிலிருக்கும் ரோந்து போலீசார் உதவியுடன் எளிதாக மடக்கிப் பிடித்து விடமுடியும்.
உயிரிழப்பை தவிர்க்கலாம் காரை துரத்திச் செல்லும்போது பிற வாகனங்களில் செல்வோருக்கும், பாதசாரிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. மேலும், துப்பாக்கியால் சுட்டு பிடிக்க முயன்றாலும் அப்பாவிகளின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இதை இந்த புதிய கருவி மூலம் தவிர்க்கலாம். குற்றவாளியின் காரில் ஒட்டப்பட்ட குண்டை எளிதாக அகற்றிவிடவும் முடியும். எனவே, அடுத்த முறையும் அதே குண்டை பயன்படுத்திக் கொள்ளலாம்.
தற்போது அமெரிக்க போலீசார் இந்த புதிய ஜிபிஎஸ் தோட்டாவை கார்களில் பொருத்தி சோதனை செய்து வருகின்றனர். தோட்டாவை செலுத்துவதற்கான துப்பாக்கி, கட்டுப்பாட்டு அமைப்புக்கு சேர்த்து ரூ.3 லட்சம் செலவாகும். அதில், ஒரு தோட்டாவின் விலை ரூ.30,000 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் நாம்ம இலங்கையிலை கொஞ்சம் கஸ்டம்தான்...
-----------------------------------------------
கருத்துகள் இல்லை