வாய் பேச முடியாத இளைஞராக தனுஷ்!
ராஞ்ச்னாவின் வெற்றியைத் தொடர்ந்து தனது அடுத்த இந்திப் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். பால்கி இயக்கும் இப்படத்தில் தனுஷின் ஜோடி கமலின் இளைய மகள் அக்ஷராஹாசன்.மேலும், இப்படத்தில் தனுஷுடன் இந்தி சூப்பர்ஸ்டார் அமிதாப்பும் நடிக்கிறார்.காதல் கதைகளை உணர்ச்சிப் பூர்வமாக தரும் பால்கியின் இப்படமும் காதலை அடிப்படையாகக் கொண்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன.இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். ஒளிப்பதிவு பி.சி.ஸ்ரீராம்.மேலும் இப்படத்தில் வாய் பேச முடியாத இளைஞராக தனுஷ் நடிப்பதாகவும், மிகச் சிறந்த நடிகனாக வேண்டும் என கனவு காணும் தனுஷிற்கு நடிகர் அமிதாப் உதவுவதாகவும் கதையோட்டம் செல்வதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்துகள் இல்லை