ஆர்யா-விஜய் சேதுபதி இவர்களுடன் இணைகிறார் ஷாம்...
‘இயற்கை’, ‘பேராண்மை’ ஆகிய படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன், யுடிவி நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து, இயக்கும் புதிய படம் ‘புறம்போக்கு’. இப்படத்தில் ஆர்யா-விஜய் சேதுபதி இருவரும் இணைந்து நடிக்கின்றனர். இப்போது இவர்களுடன் நடிகர் ஷாமும் இணைந்துள்ளார்.
சமூகத்தில் ஏற்படும் சீர்கேடுகளை எதிர்த்து போராடும் ஒரு இளைஞன், அவனுக்கு துணையாக மற்றொரு இளைஞன். இவர்கள் இருவருக்கும் சிம்ம சொப்பனமாக ஒரு போலீஸ் அதிகாரி இருக்கிறார். அந்த போலீஸ் அதிகாரி வேடத்தில்தான் ஷாம் நடிக்கிறாராம். இவர் ஏற்கெனவே எஸ்.பி.ஜனநாதனின் ‘இயற்கை’ படத்திலும் நடித்துள்ளார்.
இப்படத்தின் நாயகியாக கார்த்திகா ஒருவரே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படத்தில் வேறு கதாநாயகி இல்லை. ஜனவரி 14-ந் தேதி குலுமணாலியில் படப்பிடிப்பு தொடங்குகிறது. தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்தி, இறுதிக்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த முடிவு செய்துள்ளனர்.
கருத்துகள் இல்லை