தொடர் முழுவதும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும்
வரும் தென் ஆப்ரிக்க தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு கோப்பை வெல்லும்,'' என, முன்னாள் தென் ஆப்ரிக்க வீரர் கிளைவ் ரைஸ் தெரிவித்தார்.தென் ஆப்ரிக்கா செல்லும் இந்திய அணி, மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு குறித்து கிளைவ் ரைஸ், கூறியது. இந்திய ஒருநாள் அணி வீரர்கள் சிறப்பான நிலையில் உள்ளனர். அதேநேரம், தென் ஆப்ரிக்க வீரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். சொந்தமண்ணில் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்தனர். இதுபோன்ற காரணங்களால், இந்திய அணி கோப்பை வெல்ல பிரகாசமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இதேபோல, டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி நன்கு செயல்படுகிறது. இம்முறை டெஸ்ட் தொடரை வெல்லவும் சாதகமான நிலை உள்ளது. ஏனெனில், தென் ஆப்ரிக்க அணி பந்துவீசலில், வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்டைன் மற்றும் மார்னே மார்கலை மட்டும் தான் நம்பியுள்ளது. ஸ்டைனைப் பொறுத்தவரையில், இலக்குகள் வீழ்த்த துவங்கி விட்டால், பிறகு கட்டுப்படுத்துவது கடினம். இவர்களை மட்டும் இந்திய துடுப்பாளர்கள் சமாளித்து விட்டால், பின்னர் ஓட்டங்கள் சேர்ப்பது எளிதாகி விடும்.
தவிர, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் அஷ்வின், பிரக்யான் ஓஜா மற்றும் ரவிந்திர ஜடேஜா, தென் ஆப்ரிக்க வீரர்களை விட சிறப்பாக செயல்படுகின்றனர். இவர்களை, காலிஸ், டிவிலியர்ஸ், ஆம்லா நன்கு சமாளிப்பர். ஆனால், மற்ற துடுப்பாளார்கள் நிலை சிக்கல்தான். மொத்தத்தில் இத்தொடர் முழுவதும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும்தொடர் முழுவதும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் என உறுதியாக நம்புகிறேன். மற்றபடி, இந்திய வீரர்கள் "ஷார்ட் பிட்ச்' பந்து பலவீனம் காரணமாக, நன்கு பவுன்ஸ் ஆகும் ஆடுகளங்கள் அமைக்கப்பட வாய்ப்பில்லை,என அவர் மேலும் தெரிவித்தார்.
-----------------------------------------------
கருத்துகள் இல்லை