இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்தியாவை வென்றது தென்னாபிரிக்கா
இந்தியாவுடனான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 134 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட இத்தொடரின் வெற்றியையும் தென்னாபிரிக்க அணி தனதாக்கியுள்ளது.
டேர்பன் நகரில் இன்று நடைபெற்ற இப்போட்டி 49 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 9 விக்கெட் இழப்புக்கு 280 ஓட்டங்களைக் குவித்தது.ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான குயின்டன் டி கொக் 106 ஓட்டங்களையும், ஹஸிம் அம்லா 100 ஓட்டங்களையும் குவித்தனர். குயின்டன் டி கொக், முதலாவது போட்டியிலும் சதம் குவித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்திய பந்துவீச்சாளர்களில் மொஹமட் சமி 48 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்;த்தினார்.பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 146 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அவ்வணியின் சார்பில் ஆகக்கூடுதலாக சுரேஷ் ரெய்hன 36 ஓட்டங்களைப் பெற்றார்.தென்னாபிரிக்க பந்துவீச்சாளர்களில் சோட்சோப் 25 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டேல் ஸ்டெய்ன் 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இப்போட்டியின் ஆட்டநாயகனாக குயின்டன் டி கொக் தெரிவானார். 3 ஆவது போட்டி எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளது.
-----------------------------------------------Get in Touch With Us to Know More
-
கருத்துகள் இல்லை