அஸ்வின் முதலிடம் ,இந்தியா இராண்டாம் இடம்
ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் இந்தியா தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடித்து வருகிறது. சகலதுறை ஆட்டக்காரர் தரவரிசையில் இந்திய அணியை சேர்ந்த ஆர். அஸ்வின் முதல் இடத்தில் உள்ளார்.
டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளின் தரவரிசை பட்டியலை சர்வதேச மட்டைப்பந்துச் சபை (ஐ.சி.சி.) இன்று வெளியிட்டது. தரவரிசை பட்டியலில் இந்திய அணி 119 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவை விட 12 புள்ளிகள் அதிகமாக பெற்று தரவரிசையில் தென் ஆப்பிரிக்கா அணி முதலிடத்தில் உள்ளது. இந்த இரண்டு அணிகளும் வருகிற மார்கழி 5 ம் தேதி முதல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் 2 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசை, டாப் 20 வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர் புஜாரா 6-வது இடத்தையும், விராட் கோலி 20-வது இடத்தையும் தக்க வைத்து கொண்டுள்ளனர். தென் ஆப்பிரிக்கா வீரர் டிவில்லியர்ஸ் முதலிடத்தில் உள்ளார். இங்கிலாந்து அணி வீரர் கேப்டன் குக் 10-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். பந்து வீச்சாளர்கள் வரிசையில் இந்தியாவின் அஸ்வின் 5-வது இடத்திலும், பிரக்யான் ஓஜா 9-வது இடத்திலும் நீடிக்கின்றனர். ஆல் ரவுண்டர்கள் வரிசையில் ஆர். அஸ்வின் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டார்.நியூசிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று டெஸ்ட் போட்டிகள் வருகிற 3ம் தேதி தொடங்குகிறது.
-----------------------------------------------
கருத்துகள் இல்லை