நடிகை த்ரிஷா கன்னடத்தில் அறிமுகமாகிறார், புனித் ராஜ்குமார் ஜோடியாக....
நடிகை த்ரிஷா கன்னடத்தில் அறிமுகமாகிறார், புனித் ராஜ்குமார் ஜோடியாக.தெலுங்கில் பெரும் வெற்றி தூக்குடு படத்தின் கன்னட ரீமேக்கில்தான் அவர் நடிக்கப் போகிறார்.கன்னட திரைப்பட உலகம் ஒப்பீட்டளவில் சிறியது என்பதால், அங்கு சம்பளமும் குறைவுதான். படத்தின் பட்ஜெட் காரணமாக பெரிய நடிகைகளை கன்னடத் தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் செய்வதுமில்லை.ஆனால் இப்போது நிலைமை மெல்ல மாறி வருகிறது. சமீபத்திய சில கன்னடப் படங்கள் நல்ல வசூலைக் குவித்து வருகின்றன.எனவே பெரிய நடிகைகளை ஒப்பந்தம் செய்யும் போக்கு ஆரம்பித்துள்ளது.புனித் ராஜ்குமார் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் த்ரிஷாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். தெலுங்கில் வெற்றி பெற்ற தூக்குடு படத்தைத் தயாரித்தவர்களே, அதன் கன்னடப் பதிப்பையும் தயாரிக்கின்றனர்.இந்தப் படத்தில் நடிக்க த்ரிஷாவுக்கு ரூ 1 கோடி வரை சம்பளம் தர தயாரிப்பாளர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் சினிமாவில் நிலைத்துள்ள த்ரிஷா, இன்னும் தன் மார்க்கெட மவுசு குறையாமலிருப்பது குறிப்பிடத்தக்கது.
-----------------------------------------------
கருத்துகள் இல்லை