மேற்கிந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம்
மேற்கிந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் போட்டித் தொடரில் டுனிடினில் நடைபெற்ற முதல் டெஸ்ட் ‘சமனிலையில்’ முடிந்தது. மழையால் மேற்கிந்திய அணி மயிரிழையில் தோல்வியில் இருந்து தப்பியது.
நியூசிலாந்து– மேற்கிந்திய அணிகள் மோதும் 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வெலிங்டனில் இன்று தொடங்கியது. மேற்கிந்திய கேப்டன் டாரன்சேமி ‘டாஸ்’ வென்று நியூசிலாந்தை முதலில் விளையாட அழைத்தார்
நியூசிலாந்து தொடக்க வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டம் இழந்தனர். புல்டன் 6 ஓட்டங்களிலும், ருதர் போர்டு 11 ஓட்டங்களிலும் அவுட் ஆனார்கள். அதை தொடர்ந்து வில்லியம்சன் 45 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார்.
ஒரு முனையில் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் இருந்த முன்னாள் கேப்டன் ரோஸ் டெய்லர் சிறப்பாக விளையாடி ‘சதம்’ அடித்தார். 204 பந்துகளில் 11 பவுண்டரியுடன் அவர் 100 ஓட்டங்களைத் தொட்டார்.
டெய்லர் முதல் டெஸ்டில் இரட்டை சதம் (217) அடித்து இருந்தார். தற்போது இந்த டெஸ்டிலும் சதம் அடித்து முத்திரை பதித்தார்.டெய்லரின் சிறப்பான ஆட்டத்தில் நியூசிலாந்து 80–வது ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 265–வது ரன்னை தொட்டது.
-----------------------------------------------
கருத்துகள் இல்லை