அனுஷ்காவிடம் அத்துமீறல், போலீஸார் தடியடி
ஆந்திர மாநிலத்தில் ராஜமுந்திரியில் கலாமந்திர் என்ற ஜவுளிக்கடையை திறக்க நேற்று அனுஷ்கா மற்றும் ப்ரணீதா ஆகிய இரண்டு நடிகைகளும் வந்ததால் பெரும் கூட்டம் கூடி, போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, ரசிகர்கள் அத்துமீறி நடிகைகளிடம் சில்மிஷம் செய்ய இறங்கியதால் போலீஸார் தடியடி செய்து ரசிகர்கள் கூட்டத்தை கலைத்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராஜமுந்திரியில் நேற்று மாலை கலாமந்திர் என்ற புதிய ஜவுளிக்கடையை திறந்துவைக்க அனுஷ்கா வந்தபோது அவரை பார்க்க பெரும் கூட்டம் கூடியது. எனவே பாதுகாப்பிற்காக போலீசார் வரவழைக்கப்பட்டனர். அனுஷ்காவின் கார் வந்ததும் ரசிகர்கள் காரை சூழ்ந்துகொண்டு அவரை பார்ப்பதற்கு முண்டியடித்தனர்.
-----------------------------------------------Get in Touch With Us to Know More
அனுஷ்கா காரில் இறங்கி வந்தவுடன் அவருடன் கைகுலுக்குவதற்காக ரசிகர்கள் போட்டி போட்டதால் அந்த இடத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சில ரசிகர்கள் அத்துமீறி அனுஷ்காவின் அந்தரங்க பகுதிகளில் கைவைக்க முயன்றதால் அதிர்ச்சியடைந்த போலீஸ், உடனடியாக தடியடி செய்து கூட்டத்தை கலைத்தனர்.
இதன்பின்னர் எவ்வித டென்ஷனும் இல்லாமல் சிரித்த முகத்துடன் ஜவுளிக்கடையை திறந்துவைத்து போட்டோவுக்கும் போஸ் கொடுத்துவிட்டு காரில் ஏறிச்சென்றார் அனுஷ்கா. கடையின் உள்ளே போலீஸ் அதிகாரிகளும் அனுஷ்காவுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை