ஆசையோடு வளர்த்த நாய் இறந்து விட்டதால் சோகம், திரிஷா
ஒன்பது ஆண்டுகளாக தான் ஆசையோடு வளர்த்த நாய் இறந்து விட்டதால் மனமுடைந்து போய் உள்ளதாக நடிகை திரிஷா தெரிவித்துள்ளார். நடிகை த்ரிஷாவுக்கு நாய்கள் மீது அலாதி பிரியம். தெருவில் சுற்றும் நாய்களை தத்தெடுத்து அவற்றை பராமரிப்பது இவருக்கு மிகப் பிடித்த ஹாபியாக உள்ளது.
9 ஆண்டுகளுக்கு முன்பு ஹைதராபாத் சாலையில் அனாதையாக கிடந்த ஒரு நாய்க்குட்டியை த்ரிஷா தூக்கி வந்து, தன் சென்னை வீட்டில வைத்து வளர்த்தார். அதற்கு காட்பரி என பெயரிட்டார். அந்த நாய் மீது திரிஷாவுக்கு அளவு கடந்த பாசம் ஏற்பட்டது. படப்பிடிப்பு ஓய்வில் இந்த நாயுடன்தான் விளையாடுவார். விதவிதமான ஆடைகள் அணிவித்து அழகு பார்ப்பார்.
இந்த நாய்க்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக கால்நடை மருத்துவமனையில் சேர்த்தார். டாக்டர்கள் பரிசோதித்து வயிற்றில் கட்டி இருப்பதாக கூறினர். அதை அகற்ற அறுவை சிகிச்சை செய்தார்கள். அப்போது நாய் இறந்து போனது. இது திரிஷாவை கோபத்தில் தள்ளிவிட்டது.
இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் வளர்த்த நாய் இறந்து போனதை எனக்கு ஏற்பட்ட மோசமான இழப்பாக கருதுகிறேன். மனம் உடைந்து போய் இருக்கிறேன். இந்த துக்கத்தில் இருந்து படிப்படியாக மீள முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்," என்றார்
-----------------------------------------------
கருத்துகள் இல்லை