வறுமை ஒருநாள் வளமையாக மாறும் - பாரதிராஜா
களிகை G.ஜெயசீலன் வழங்க ஜெனி பவர்புல் மீடியா படநிறுவனம் சார்பாக பெல்சி ஜெயசீலன் தயாரிக்கும் படம் “அதுவேற இதுவேற”.இதில் நாயகனாக வர்ஷனும், கதாநாயகியாக சானியா தாராவும் நடிக்கின்றனர். இவர்களுடன் இமான் அண்ணாச்சி, கஞ்சா கருப்பு, பொன்னம்பலம், சிங்கமுத்து, தளபதி தினேஷ், தியாகு, ஷகீலா, போண்டாமணி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் கமலா திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர் சங்க தலைவர் கே.ஆர்.பேசும் போது….
ஒரு தயாரிப்பாளரே கவுன்சிலிங் வேண்டு என்று கேட்பது நல்ல விஷயம் இன்னும் மூன்று மாதங்களில் இதற்கான அனைத்து முயற்சிகளையும் தயாரிப்பாளர் சங்கம் எடுக்கும் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய பாரதிராஜா….
நான் படைத்துறைக்கு வந்து இவ்வளவு வருடங்கள் ஆகிவிட்டது எனக்கு முன்னால் பேசிய எல்லோருமே இந்த படத்தின் இயக்குனர் திலகராஜன் நல்ல அறிவாளி.ஆனால் வறுமையில் வாடுகிறார் என்று பேசினார்கள் வறுமை ஒருநாள் வளமையாக மாறும். அவருக்கு தான் வறுமையே தவிர அவரது அறிவுக்கு வறுமை கிடையாது.
நானும் வறுமையில் இருந்து வந்தவன்தான் இன்று எனக்கு நான்கு கார்கள் பல வீடுகள் இருக்கிறது. எனக்கு பின் நிலையாக இருப்பது நான் படைத்த படைப்புகளும் எனது சிந்தனைகள் மட்டுமே. எம்.ஜி.ஆர் வாழ்ந்த வீடு இன்று பழமையாகி கிடக்கிறது ஆனால் அவரது படைப்புகளும் படங்களும் என்றுமே பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. சிந்தனைகள் மட்டுமே நிலைத்து நிற்கும் என்று பாரதிராஜா பேசினார்.
மற்றும் ஆர்.பி.சௌத்திரி, விக்ரமன், நாசர், விவேக், கமிலா நாசர், கே.எஸ்.சீனிவாசன், ஈ.ராம்தாஸ், பேரரசு, சித்ராலட்சுமணன்,கே.ராஜன்,ஜி.சிவா, எஸ்.ஏ.ராஜ்குமார்,நா.முத்துகுமார் விவேகா,ஆர்.வி.உதயகுமார், ஆர்.சுந்தர்ராஜன், சிதம்பரம் செல்வராஜ், இசையமைப்பாளர் தாஜ் நூர்,கதாநாயகன் வர்ஷன், கதாநாயகி சானியா தாரா, இமான் அண்ணாச்சி ஆகியோர் பேசினார்கள்.இயக்குனர் திலகராஜன் நன்றி தெரிவித்தார்.
-----------------------------------------------
கருத்துகள் இல்லை