மேற்கிந்திய பந்து வீச்சாளர்கள் கொடுத்த ஓட்டங்கள் சதம் தாண்டியது
டுனெடினில் நடைபெறும் நியூசீலாந்து, மேற்கிந்திய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாளான இன்று றொஸ் டெய்லர் 217 ரன்கள் அடித்து ஆட்டமிழ்க்காமல் திகழ கடைசி வரை துடுப்பாட்டத்தில் அசத்திய நியுசீலாந்து 9 இலக்குகள் இழப்பிற்கு 609 ஓட்டங்கள் குவித்து விலகியது. ஆட்ட முடிவில் மேற்கிந்தியா தன் முதல் இன்னிங்ஸில் 2 இலக்குகள் இழப்பிற்கு 67 ஓட்டங்கள் எடுத்துள்ளது.டேரன் பிராவோ 37 ஓட்டங்களுடனும் சாமுயெல்ஸ் 14 ஓட்டங்களுடனும் ஆடி வருகின்றனர்.
மேற்கிந்திய அணியில் டினோ பெஸ்ட் 148 ஓட்டங்களுக்கு 3 இலக்குகள், காப்ரியல் 148 ஓட்டங்களுக்கு இலக்குகள் ஏதூமில்லை. ஷில்லிங்போர்ட் 138 ஓட்டங்களுக்கு 1 இலக்கு, டேரன் சாமி 21 ஓட்டத்திலும் தியோ நரைன் 24 ஓட்டத்திலும் பந்து வீச்சில் சதத்தை கோட்டைவிட்டனர். அவர்களும் சதம் அடித்திருந்தால் அது ஒரு சாதனையாக இருந்திருக்கும். வாட்லிங் (41), சோதி (35), வாக்னர் (37) அகியோரின் உதவியுடன் டெய்லர் இரட்டை சதம் கடந்தார். அவர் 319 பந்துகளில் 23 எல்லை கடந்த நான்குகளுடன் 217 எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
-----------------------------------------------
கருத்துகள் இல்லை