நான் இலவசமாக நடிக்கத் தயார். ஆனால், ரஜினி எப்படி? கமலகாசன்..
சென்னை சர்வதேச திரைப்பட விழாவை நடிகர் கமல்ஹாசன், ஹிந்தித் திரைப்பட நடிகர் ஆமீர் கான் ஆகியோர் நேற்று துவக்கி வைத்தார்கள்.விழாவில் இசை நிகழ்ச்சியும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
பின்னர் கமல்ஹாசனிடம் , நடிகர்கள் சூர்யா, பார்த்திபன், இயக்குனர் பாலுமகேந்திரா, இசையமைப்பாளர் இளையராஜா, பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகியோர் கேட்ட கேள்விகளை சுஹாசினி மேடையில் படிக்க அவற்றிற்கு கமல்ஹாசன் பதிலளித்தார்.
அவற்றில் ஒரு கேள்வியாக “இந்திய சினிமா நூற்றாண்டின் பரிசாக நீங்களும், ரஜினிகாந்தும் இணைந்து நடிப்பிர்களா ? ” என்ற கேள்வி இடம் பெற்றது.
அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், “உங்களுக்கு பரிசு..எங்களுக்கு…இரண்டு பேரையும் வைத்து படம் எடுக்கிற அளவுக்கு வசதியான தயாரிப்பாளர் கிடைக்க வேண்டும். நான் இலவசமாக நடிக்கத் தயார். ஆனால், ரஜினி எப்படி என்று தெரியவில்லை, ” என பதிலளித்தார்.
அப்படி ரஜினியும் சம்மதித்தால் இந்த நூற்றாண்டின் சிறந்த படமாக அப்படம் இருக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை…
உலகநாயகனும், சூப்பர் ஸ்டாரும் மனம் வைப்பார்களா ?
-----------------------------------------------
கருத்துகள் இல்லை