மனதை நெருடும் வீரம்.....
சிறுத்தை பட வெற்றிக்குப் பிறகு தனது இரண்டாவது படைப்பான வீரம் படத்தை இயக்கிவிட்டார் சிவா. ஆரம்பம் படம் ரிலீஸ் ஆனதுமே வீரம் படத்தில் நடிக்க போய்விட்டார் அஜித் படப்பிடிப்பு 3 மாதங்கள் கூட நடக்கவில்லை. அதற்குள்ளே படத்தின் அனைத்து காட்சிகளையும் எடுத்துவிட்டார் இயக்குநர் சிவா. முழுக்க முழுக்க ஒரு காமெடி மற்றும் சென்ட்டிமெண்ட் படமாக இந்த படம் உருவாகியுள்ளதாம். படம் சம்பந்தமான புதிய தகவல் இன்று வெளியாகியுள்ளது. அதாவது எல்லா படங்களைப் போல் இறுதி க்ளைமேக்ஸில் ஒரு அதிரடி ஆக்ஷன் காட்சியை வைத்து படத்தை முடிக்காமல். கடைசி 30 நிமிடங்கள் சென்ட்டிமெண்டை வைத்து படத்தை முடித்திருக்கிறாராம் சிவா. அஜித் அறிமுக காட்சியும் ஆங்காங்கே ஆக்ஷனும் அதிரடியாகவும், காமெடியில் சந்தானம் பட்டையை கிளப்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் அஜித்துடன் தமன்னா, விதார்த், நாசர், சந்தானம் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். படத்திற்கு இசையமைத்திருப்பவர் தேவி ஸ்ரீ பிரசாத்.
கருத்துகள் இல்லை