கெளதம் மேனனின் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கும் 'சட்டென்று மாறுது வானிலை'
நடிகர் சிம்பு நடிக்கும் இயக்குநர் கௌதம் மேனனின் புதிய படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. தற்போது அந்தப் படத்தின் தலைப்பு 'சட்டென்று மாறுது வானிலை' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது அவரது முந்தைய படமான 'வாரணம் ஆயிரம்' படத்தில் பிரபலமான 'நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை' என்ற பாடலில் வரும் வரியாகும். ஆஸ்கர் விருது பெற்ற ஏ.ஆர்.ரகுமானே இந்தப் படத்திற்கும் இசையமைக்க உள்ளார். இதன் மூலம் இந்த மூவர் கூட்டணி இந்தப் படத்திலும் மீண்டும் இணைகின்றது.
இந்தப் படத்திற்கான முதல் டியூனே தாளம் போடவைப்பதாக இருக்கின்றது என்று குறிப்பிட்டுள்ள சிம்பு இந்தப் படத்தின் தலைப்பு தனக்கு மிகவும் அர்த்தமுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். கெளதம் மேனன் தனது படங்களுக்கு தமிழ்ப் பெயர்களை வைப்பதில் நாட்டம் காட்டிவருகின்றார்.
அவரது படங்களான 'காக்க காக்க', 'துருவ நட்சத்திரம்' போன்றவை பாரம்பரியமான தமிழ் வார்த்தைகளாகும். 'வாரணம் ஆயிரம்' என்பது திருப்பாவை பாடலைச் சார்ந்து வருவது. தற்போது தனது புதிய படத்திற்கும் இத்தகைய தலைப்பையே அவர் தேர்ந்தெடுத்துள்ளார் என்று திரையுலகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
-----------------------------------------------
கருத்துகள் இல்லை