பிரபஞ்ச அழிவு ஆரம்பமாகி விட்டதாம்
இந்த பூமி உட்பட சூரியன், சந்திரன் என்று எல்லா கிரகங்களையும் உள்ளடக்கிய பிரபஞ்சத்தின் அழிவு, ஏதோ ஒரு கிரகத்தில் ஆரம்பமாகி விட்டது. இந்த அழிவின் இறுதியில் பிரபஞ்சம், இப்போதுள்ள அளவை விட, சிறியதாக, ஆனால், பொசுக்கும் தீப்பந்தாக உருமாறி விடும். தெற்கு டென்மார்க் பல்கலைக்கழக இயற்பியல் விஞ்ஞானிகள் இப்படி ஒரு புது பீதியை கிளப்பியுள்ளனர்.
அச்சப்படுத்தும் அந்த ஆய்வு முடிவுகள்: உலகம் உட்பட இந்த பிரபஞ்சம் அழியப்போகிறது என்று முன்னதாகவே ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், நாங்கள் கண்டுபிடித்த ஆய்வு முடிவுகளின் படி, பிரபஞ்சம் எப்படி அழியப்போகிறது.அதன் பின் அதன் நிலை என்ன என்று தெரியவந்துள்ளது. பல கிரகங்களும் ஒன்றோடு ஒன்று மோதி நொறுங்கி, உருத்தெரியாமல் ஆகி விடும். சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் என்று கிரகங்களும், நட்சத்திர கூட்டங்களும் கூட எல்லாம் ஒன்று சேர் ந்து விடும். அதுபோல, இந்த பூமியில் மண், கற்கள் என்று கனிமங்கள் முதல் எல்லாம் உருத்தெரியாமல் ஆகி விடும். பூமியே வேறு உருவத்துக்கு போய்விடும். மொத்தத்தில் எல்லா சக்திகளும், தன்மைகளும் மாறி ஒரு முழு தீப்பந்து போல ஒரே கிரகமாக மாறி விடும் இந்த பிரபஞ்சம்.
இப்படி உருமாறுவதால் அதன் வெப்பசக்தி பல கோடி மடங்கு அதிகரிக்கும். அப்படி ஆகும் போது, இந்த பிரபஞ்சமே ஒரு ராட்சத தீப்பந்து போலாகி விடும். மிகவும் கோரமான இந்த உருமாற்றங்கள் தான் பிரபஞ்சத்தின் அடுத்த கட்டம் என்று மதிப்பிடப்படுகிறது. அது எப்படியிருக்கும். பூமி போலவே வேறு கிரகம் இயங்கும். அங்கு மனிதர்கள் போல உயிரினங்கள் உருவாகும்.
இந்த பிரபஞ்சம் சிறு துகள் பல கோடி அணுத்துகளாக வெடித்து சிதறி அணுவை பிளந்து அணு உருவானது போல உருவானது தான். இப்படி சொன்ன ஹிக்ஸ் ஆய்வு போல, துகள்கள் எல்லாம் வெளிப்பட ஆரம்பிக்கும். பிரபஞ்சம் அழிவது, எங்கே, அது பூமியாகவும் இருக்கலாம், வேறு கிரகமாகவும் இருக்கலாம், அங்கு அழிவு ஆரம்பமாகி விட்டது. ஒரு நீர்க்குமிழி போல ஆரம்பமாகி விட்டது என்பதே உண்மை என ஆய்வில் தெரியவந்துள்ளது. அது சரி, எப்போது பிரபஞ்சம் முழுமையாக அழிந்து தீப்பந்தாகும் என்று தெரியுமா? 100 கோடி ஆண்டுகளுக்கு பின். அப்பாடா, நாம் கவலைப்பட வேண்டாம் தானே.
-----------------------------------------------
கருத்துகள் இல்லை