• Breaking News

    இரண்டாவது ஆஷஸ் போட்டியிலும் அவுஸ்திரேலியா வெற்றி

    ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியிலும் அவுஸ்திரேலிய அணி வென்றுள்ளது. அடிலெய்ட் நகரில் நடைபெற்ற இப்போட்டியின் 5 ஆவது நாளான இன்று 218 ஓட்டங்களால் அவுஸ்திரேலிய அணி வென்றது.

    இதன் மூலம், 5போட்டிகள் கொண்ட இத்தொடரில் அவுஸ்திரேலியா 2:0 விகிதத்தில் முன்னிலையில் உள்ளது. இப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 570 ஓட்டங்களைப்பெற்ற நிலையில் துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 172 ஓட்டங்களை மாத்திரமே  பெற்றது.


    அவுஸ்திரேலிய அணி  இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 132 ஓட்டங்களைப்பெற்ற நிலiயில் துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது.வெற்றிபெறுவதற்கு  531 ஓட்டங்கள் தேவையான நிலையில் நேற்று இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்டமுடிவின்போது 6 விக்கெட் இழப்புக்கு 247 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.போட்டியின் இறுதிநாளான இன்று 312 ஓட்டங்களுடன் அவ்வணியின் சகல விக்கெட்டுகளும் வீழ்ந்தன.


    அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்களில் பீட்டர் சிடில் 57 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும்  போல் ஹிஸ் 54 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.முதல் இன்னிங்ஸில் 40 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்திய மிட்செல் ஜோன்ஸன் இப்போட்டியின் ஆட்ட நாயகனாகத் தெரிவானார். மூன்றாவது போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

     -----------------------------------------------

    Tamilus இன் பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களுடை நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

    If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !


    Get in Touch With Us to Know More

    kindpng_1122282

    Brand-Center_-social-icons_join-us-community-icon_purple

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad