மாட்டு வண்டி ஓட்டிய அஜீத்!
சிட்டி சப்ஜெக்டுகளில் என்னதான் தூசு படியாமல் நடித்தாலும், கிராமத்து கதை என்று வருகிறபோது சேற்றுக்குள் உருண்டு புரள்கிற மாதிரியான காட்சிகளும் இருக்கும். ஆரம்பம் படம் வரை ஜீன்ஸ்-டீசர்ட் என்று நடித்துக்கொண்டிருந்த அஜீத், வீரம் படத்தில் வேஷ்டி-சட்டைக்கு மாறியுள்ளார். ஐந்து அண்ணன்-தம்பிகளில் ஒருவராக நடித்திருக்கிறார்.
இரண்டு குடும்பத்திற்கிடையே நடைபெறும் பிரச்னை என்பதால், முதலில் பாசமிகு அண்ணனாக நடித்துள்ள அஜீத், பின்னர் குடும்பத்துக்காக ஆக்ஷன் கோதாவில் குதிக்கிறாராம். மேலும், தமன்னாவை வாய்க்கால் வரப்புகளில் துள்ளிக்குதித்து காதலிக்கும் ரொமான்ஸ் காட்சிகளும் உள்ளதாம்.
மேலும், ஒரு சண்டை காட்சியில் மாட்டு வண்டியில் தப்பித்து செல்லும் வில்லன்களை, தானும் ஒரு மாட்டு வண்டியில் அமர்ந்தே துரத்தி துரத்தி சண்டை செய்யும் காட்சியிலும் நடித்துள்ளாராம் அஜீத்.
சில நாட்களாக இந்த காட்சியை படமாக்கி முடித்த பிறகு, அந்த கிராமத்து மக்கள் அனைவருக்கும் உணவு அளிக்கப்பட்டதாம். அஜீத் சார்பிலேயே இந்த விருந்து நடத்தப்பட்டதால் அவரே கிராம மக்களுக்கு உணவு பரிமாறினாராம்.
-----------------------------------------------
கருத்துகள் இல்லை